ரவுடி முக்தார் அன்சாரியின் கட்டிடம் இடித்துத் தரைமட்டம்..! உத்தரபிரதேச அரசு அதிரடி நடவடிக்கை..!

27 August 2020, 5:01 pm
mukhtar_ansari_illegal_building_demolition_updatenews360
Quick Share

லக்னோ நகரின் தலிபாக் காலனி அருகே ரவுடி முக்தார் அன்சாரிக்கு சொந்தமான சட்டவிரோத சொத்தை லக்னோ நிர்வாகம் இன்று இடித்து தரைமட்டமாக்கியது. இடிப்பதற்கான செலவை குண்டர்கள் முக்தார் அன்சாரி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இடிக்கும் பணியின் போது வளாகத்திற்கு வெளியே பலத்த போலீஸ் படை காவலுக்கு இருந்தது.

லக்னோ நிர்வாகம் கூறுகையில், “ரவுடி முக்தார் அன்சாரியின் சட்டவிரோதமாக சொத்து தலிபாக் காலனிக்கு அருகே இடிக்கப்பட்டது. இடிப்பதற்கான செலவுகள் அவரிடமிருந்து மீட்கப்படும். மேலும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும். இந்த சட்டவிரோத கட்டுமானத்திற்கு அனுமதியளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளது.

ஜூலை 17’ஆம் தேதி, உத்தரபிரதேச அரசு ரவுடிகள் மற்றும் தாதாக்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஜான்பூரில் முக்தார் அன்சாரி உதவியாளர்களின் ரூ 3.17 கோடி மதிப்புள்ள பல சொத்துக்களை நிர்வாகம் கைப்பற்றியது. அன்சாரியின் மற்றொரு உதவியாளரான ஸ்ரீபிரகாஷ் மிஸ்ரா என்ற ஜுன்னா பண்டிட்டின்50 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை வாரணாசி போலீசார் ஜூலை 11’ஆம் தேதி ரவுடி சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்தனர்.

ஜூலை மாதம் அன்சாரியின் நான்கு உதவியாளர்களின் ஆயுத உரிமங்களையும் காவல்துறை நிறுத்தியது. காசிப்பூர்காவல் கண்காணிப்பாளர் ஓ.பி. சிங், ” முக்தார் அன்சாரியின் மகன் அப்பாஸ் அன்சாரி வீட்டில் இருந்து ஆறு ஆயுதங்களையும் 4,431 தோட்டாக்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அனைத்து ஆயுதங்களையும் ஒரே உரிமத்தில் வாங்கியதாக அவர் தெரிவித்தார்.” எனக் கூறியுள்ளார்.

Views: - 33

0

0