உத்தரகாண்ட் காங்கிரஸ் தலைவர் திடீர் மரணம் : பிரதமர் மோடி, காங் எம்பி ராகுல் காந்தி இரங்கல்!!

Author: Udayachandran
13 June 2021, 8:20 pm
Indira - Updatenews360
Quick Share

உத்தரகாண்ட் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினரும்,காங்கிரஸ் தலைவருமான தலைவருமான இந்திரா ஹிருதயேஷ் நேற்று டெல்லியில் நடந்த கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் திடீரென்று மாரடைப்பு காரணமாக இன்று இந்திரா ஹிருதயேஷ் காலமானார். அவருக்கு வயது 80. இதனையடுத்து,அவரது மறைவிற்கு காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பிற அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உத்தரகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வலுவான இணைப்பான டாக்டர் இந்திரா ஹிருதயேஷ் ஜி மறைந்த சோகமான செய்தியை கேள்விப்பட்டேன்.பொது சேவை மற்றும் காங்கிரஸ் கட்சிக்காக அவர் கடைசி வரை பணியாற்றினார். அவரது சமூக மற்றும் அரசியல் பங்களிப்புகள் ஒரு உத்வேகம்.அவரின் அன்புக்குரியவர்களுக்கு இரங்கல் அந்த வகையில், இந்திரா ஹிருதயேஷ் அவர்களின் மறைவிற்கு, இரங்கல் என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

திறமையான சட்டமன்ற உறுப்பினராகவும், சிறந்த நிர்வாக அனுபவம் உடையவராகவும் இருந்தவர் இந்திரா ஹிருதயேஷ், அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Views: - 215

0

0