உத்தரகண்ட் மீட்புப் பணிக்கு உதவிய ரிஷப் பண்ட்; நெட்டிசன்கள் பாராட்டு

Author: Poorni
9 February 2021, 12:37 pm
Quick Share

உத்தரகண்ட் மாநிலத்தில் பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களை மீட்கும் பணிக்கா, சென்னை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், தான் பெறும் சம்பளத்தை அளிப்பதாக, இந்திய அதிரடி வீரரும், விக்கெட் கீப்பருமாக உள்ள ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார். அவரது இந்த மனிதாபிமான உதவிக்கு, நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

உத்தரகண்ட் மாநிலம், இமயமலைக்கு அருகில் அமைந்துள்ள சமோலி மாவட்டத்தில், உள்ள மலைச் சிகரம் நந்தாதேவி. இந்த மலைச் சிகரத்தில், நேற்று முன்தினம், பனிப்பாறைகள் திடீரென உடைந்து, பனிச்சரிவு ஏற்பட்டதில், தவுலிகங்கை நதியில், திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதில் தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர். சேதமடைந்த நீர் மின் நிலையத்தில் இருந்து, இதுவரை 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 170க்கும் அதிகமானோர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணயில், மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், உத்தரகண்ட் வெள்ள நீரில் சிக்கியவர்களை மீட்கும் பணிக்காக, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், சென்னை டெஸ்ட் போட்டியில் தான் பெறும் சம்பளத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘உத்தரகண்ட் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். மீட்பு பணிக்கு உதவி செய்ய, சென்னை டெஸ்ட் போட்டியில் நான் பெறும் சம்பளத்தை அளிக்கிறேன். அனைவரும் உதவி செய்ய முன்வரும்படி கேட்டுக் கொள்கிறேன்’’ என்றார். அவரது இந்த செயல் நெட்டிசன்களை கவர, பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

Views: - 30

0

0