காலுக்கு முகக்கவசம்: அமைச்சரே இப்படி பண்ணலாமா?…வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!!

16 July 2021, 12:37 pm
Quick Share

உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநில பாஜக அமைச்சர் காலில் மாஸ்க் அணிந்தபடி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி பலரது விமர்சனங்களை பெற்றுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. நடப்பு சட்டமன்றத்தின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவு பெறவுள்ளது. இந்த சூழலில் உட்கட்சி பிரச்சினை காரணமாக இரண்டு முறை முதலமைச்சர் மாற்றம் செய்யப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது. சமீபத்தில் புஷ்கர் சிங் தாமி உத்தரகாண்ட் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.


இந்நிலையில் அமைச்சர்கள் சுவாமி யதிஷ்வாரானந்த், பிஷன் சிங் சுபால், சுபோத் உனியால் ஆகியோர் ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் யதிஷ்வாரானந்த் தனது முகக்கவசத்தை கழட்டி கால் கட்டை விரலில் தொங்கவிட்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மாநில மக்களுக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டிய அமைச்சரே இப்படி செய்திருப்பது சமூக வலைதளங்களில் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது. பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். கொரோனா 3வது அலைக்கு எதிராகவும், டெல்டா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்கவும் முகக்கவசத்தை இப்படித்தான் அணிய வேண்டும் என்று சிலர் கிண்டலாக பதிவிட்டுள்ளனர். மேலும் முகக்கவசத்தை தொங்க விடுவதற்கு மிக மிக சுத்தமான இடத்தை அமைச்சர் யதிஷ்வாரானந்த் கண்டுபிடித்துள்ளதாக மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 191

0

0