14 வயது சிறுவனை தாக்கும் இரு காவலர்கள்..! (வீடியோ)

14 February 2020, 6:16 pm
UP Boy Attack- updatenews360
Quick Share

சமூகத்தில் நடைபெறும் எந்த நிகழ்வாக இருந்தாலும் முதலில் சமூக ஊடகங்களில் வெளிவந்துவிடுகிறது,

அப்படி ஒரு வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் 14 வயது சிறுவனை இரண்டு காவலர்கள் சரமாரியாக தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

எதற்காக அந்த சிறுவனை தாக்குகின்றனர் என்ற தகவல் தெரியவில்லை. ஆனால் அந்த சிறுவனை அடிக்க அவர்களுக்கு உரிமையுள்ளதா, அப்படி இருந்தாலும் பொது இடத்தில் அந்த சிறுவனை கடுமையாக தாக்க அவர்களுக்கு உரிமை உள்ளதா என பல கேள்விகளை முன்னிறுத்துகிறது.

ஒரு கட்டத்தில் அடி தாங்க முடியாமல் கீழே விழும் சிறுவனை, மீண்டும் எழ வைத்து ஒரு கம்பியை பிடிக்க சொல்லி, பின்னால் நின்று கடுமையாக தாக்கியுள்ளனர். இதை செல்போனில் மறைமுகமாக படம் பிடித்த நபர் ஒருவர் வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ குறித்து நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.