மூத்த குடிமக்களுக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி..! மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு..!
24 February 2021, 4:22 pm60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இதர தீவிர உடல்நலப் பிரச்சினை உள்ளவர்களுக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று அறிவித்துள்ளார்.
10,000 அரசு மையங்களில் அவர்களுக்கு இலவசமாக தடுப்பூசிகள் வழங்கப்படும். இதற்கிடையில், 20,000’க்கும் மேற்பட்ட தனியார் தடுப்பூசி மையங்களிலும் தடுப்பூசி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் தனியார் மருத்துவமனைகளில் இருந்து தடுப்பூசி போட விரும்புவோர் பணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று ஜவடேகர் கூறினார். “அவர்கள் செலுத்த வேண்டிய தொகை உற்பத்தியாளர்கள் மற்றும் மருத்துவமனைகளுடன் கலந்துரையாடி 3-4 நாட்களுக்குள் சுகாதார அமைச்சகத்தால் முடிவு செய்யப்படும்” என்று அவர் கூறினார்.
முன்னதாக நேற்று, மத்திய சுகாதார அமைச்சகம் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் சுகாதார மற்றும் முன்னணி ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்துமாறு கேட்டுக் கொண்டது. அங்கு கொரோனா மீண்டும் தீவிரமடைவதால், கொரோனா முன்களப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜனவரி 16’ஆம் தேதி நாடு தழுவிய தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
0
0