‘ஜூலை மாதம் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை மட்டும் போகவில்லை’: காங்., எம்.பி. ராகுல்காந்தி குற்றச்சாட்டு..!!

Author: Aarthi
1 August 2021, 2:06 pm
RAGUL-UPDATENEWS360
Quick Share

புதுடெல்லி: ஜூலை மாதமும் கடந்துவிட்டது ஆனால் நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்புகள் தற்போது 40 ஆயிரத்துக்கு மேல் பதிவாகிறது. 3வது அலையை தடுக்க டிசம்பர் மாதத்திற்குள் குறைந்தபட்சம் 60 சதவீத மக்களுக்கு இரு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Rahul Gandhi starts his election campaign in Tamil Nadu today ||  தமிழகத்தில் இன்று தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார், ராகுல்காந்தி

ஆனால், தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவுவதாக காங்., எம்.பி., ராகுல் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறார். கடந்த ஜூலை 2ம் தேதி தனது ட்விட்டரில் ‘ஜூலை மாதம் வந்துவிட்டது, தடுப்பூசி போதுமான அளவு வரவில்லை’ எனத் தெரிவித்திருந்தார்.

SII's vaccine shortage in India amid rising coronavirus cases — Quartz India

இந்நிலையில் இன்று மீண்டும் தடுப்பூசி பற்றாக்குறை பற்றி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது டுவிட்டர் பதிவில் ‘ஜூலை மாதம் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை மட்டும் போகவில்லை’ என்று தெரிவித்துள்ளார். மேலும், ‘தடுப்பூசி எங்கே’ என்ற ஹேஸ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்.

Views: - 189

0

0