வானில் நிகழ்ந்த அதிசயம்… நிலாவுக்கு பின் மறைந்த வெள்ளி.. மீண்டும் அடுத்த வாரம் நிகழப்போகும் இதுவரை நடந்திடாத அரிய நிகழ்வு..!!

Author: Babu Lakshmanan
25 March 2023, 10:00 am
Quick Share

அதிசய நிகழ்வாக வானில் நிலாவுக்கு பின் வெள்ளி மறையும் நிகழ்வை பொதுமக்கள் ஆச்சர்யமாக கண்டுரசித்தனர்.

விண்ணில் உள்ள கோள்கள் நகர்ந்து வருகையில், சில சமயங்களில் அதிசயமாக நேருக்கு நேர் சந்திப்பதும், அருகாமையில் வட்டமிடுவதும் அதிசயமான நிகழ்வாகும். அந்தவகையில், நேற்று வெள்ளி மற்றும் வியாழன் கோள்கள் நிலாவுக்கு அருகில் வந்தது. முக்கிய கோள்கள் நெருங்கி இருக்கும் அரிய நிகழ்வு உலகின் பல்வேறு நாடுகளில் தென்பட்டிருக்கும்.

நிலவின் இருண்ட பாகத்திற்கு பின்புறம், வெள்ளி மெதுவாக மறைந்தது. இந்த நிகழ்வின் போது இரண்டும் ஒரே நேர்கோட்டில் இருந்தது. மாலை நேர வானில் உள்ள பிரகாசமான கோள்களி்ல் ஒன்று வெள்ளி என்றாலும், நிலவின் பின்னால் ஒளிவதால் அதன் பிரகாசம் மேலும் 250 மடங்கு உயர்த்தி அழகாக காட்சியளித்தது.

இதைப்போல, இதுவரை நடந்திடாத அரிய நிகழ்வு ஒன்று அடுத்த வாரம் நடக்க இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், யுரேனஸ் ஆகிய 5 கோள்களும் பூமிக்கு அருகில் வரும் அரிய நிகழ்வு நடைபெற இருப்பதாகவும், அநேகமாக வரும் 28ம் தேதி இந்த அரிய நிகழ்வு நடைபெறவுள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

அந்த 5 கோள்களும், வில் வடிவத்தில் நமது கண்களுக்கு தென்படும் என்றும், இந்த நிகழ்வை அதற்கு முன் தினம் மற்றும் அடுத்த நாளும் வானத்தில் தெரியக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 182

0

0