அயோத்தி ராமர் கோவிலில் தரிசனம் செய்யத் தயாரா..? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விஷ்வ ஹிந்து பரிஷத்..!!

Author: Babu Lakshmanan
7 September 2021, 9:52 am
Quick Share

அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்களின் தரிசனம் தொடர்பான முக்கிய அறிவிப்பை விஷ்வ ஹிந்து பரிஷத் வெளியிட்டுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, கட்டுமானப் பணிகளை துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்களின் தரிசனம் தொடர்பான முக்கிய அறிவிப்பை விஷ்வ ஹிந்து பரிஷத் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் தேசிய பொதுச் செயலர் மிலிந்த் பரந்தே கூறியதாவது:- ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் திட்டமிட்ட காலத்திற்குள் முடிவடைந்து விடும். அக்., மாதத்துக்குள் அஸ்திவாரம் தயார் ஆகி விடும். 2023ம் ஆண்டு டிசம்பரில் ராமர் சிலை கர்ப்பகிரகத்தில் நிறுவப்பட்டு, தினசரி பூஜைகள் துவக்கப்படும். பக்தர்களும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர், என தெரிவித்துள்ளார்.

Views: - 325

0

0