திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை குடியரசு தலைவர் சாமி தரிசனம்..!!

5 March 2021, 11:32 am
venkaiah tirupati - updatenews360
Quick Share

ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு சுவாமி தரிசனம் செய்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடு குடும்பத்தினருடன் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு செயல் அதிகாரி ஜவஹர் ரெட்டி தலைமையில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் வரவேற்று சாமி தரிசனம் செய்து வைத்தனர்.

பின்னர் ரங்கநாத மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை வழங்கி வேத ஆசீர்வாதம் செய்து வைத்தனர். முன்னதாக திருப்பதி ஐஐடி வளாகத்தில் மாணவா்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்று பேசி தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் வெங்கைய நாயுடு பங்கேற்றார்.

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்த பின்னர் தனி விமானத்தில் சூரத் புறப்பட்டு சென்றார்.

Views: - 9

0

0