சித்தராமையா கொடுத்த பணத்தை திருப்பி தூக்கி எறிந்த பெண்… காங்கிரசுக்கு தர்மசங்கடம்…!! வைரலாகும் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
15 July 2022, 9:58 pm
Quick Share

மதக்கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த கர்நாடகா மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு தர்மசங்கடமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் பாகல்கோர் மாவட்டம் பதாமி தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் சித்தராமையா. இவர் தனது தொகுதியில் நடந்த மதக்கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ.2 லட்சத்தை வழங்கினார்.

ஆனால், அவர் வழங்கிய பணத்தை பெற்றுக் கொள்ளாத பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண், அதனை சித்தராமையா செல்லும் வாகனத்தின் மீது தூக்கி ஏறிந்து, தனது எதிர்ப்பை பதிவு செய்தார். அப்போது, பணம் எங்களுக்கு வேண்டாம், சட்டம் ஒழுங்கு சீரடைந்து, அமைதி திரும்பினால் போதும் என்று கூறினார்.

அந்த சமயம் காரில் அமர்ந்தவாறு, அந்தப் பெண்ணின் கையை பிடித்துக் கொண்டு சமாதானம் செய்ய சித்தராமையா முயன்றார். ஆனால், அவர் பணம் வேண்டாம் எனக் கூறி வாகனத்தின் பின்னால் தூக்கி எறிந்தார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கச் சென்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா அவமதிக்கப்பட்டது, அக்கட்சியினரிடையே தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

Views: - 709

0

0