பாலியல் குற்றவாளிக்கு தேர்தலில் சீட்..! கேள்வி கேட்ட பெண் தலைவர்..! அடித்துத் துவைத்த காங்கிரஸ் தொண்டர்கள்..!

Author: Sekar
11 October 2020, 3:29 pm
Tara_Yadav_UpdateNews360
Quick Share

காங்கிரஸ் தலைவர் தாரா யாதவை இன்று உத்தரபிரதேசத்தின் தியோரியாவில் கட்சித் தொண்டர்கள் அடித்து ரகளையில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேசத்தில் வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவருக்கு சீட் வழங்கும் கட்சியின் முடிவை கேள்விக்குட்படுத்தியதற்காக தன்னை அடித்துத் துன்புறுத்தினர் என தாரா யாதவ் குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தில் பிரியங்கா காந்தி நடவடிக்கை எடுப்பதற்காக தான் காத்திருக்கிறேன் என காங்கிரஸ் தொண்டர்களால் தாக்கப்பட்ட பின்னர் அவர் கூறினார்.

இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய அவர், “ஒரு கற்பழிப்பாளரான முகுந்த் பாஸ்கருக்கு வரவிருக்கும் இடைத்தேர்தலில் சீட் வழங்குவதற்கான கட்சியின் முடிவை நான் கேள்வி எழுப்பியபோது கட்சித் தொண்டர்களால் நான் தாக்கப்பட்டேன்.” எனக் கூறினார். 

ஒரு கற்பழிப்பாளருக்கு டிக்கெட் கொடுப்பது, ஹத்ராஸ் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்டவரின் நீதிக்காக போராடும் கட்சியின் பிம்பத்தை கெடுக்கும் என்றும் அவர் கூறினார். “ஒருபுறம், எங்கள் கட்சித் தலைவர்கள் ஹத்ராஸ் வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க போராடுகிறார்கள். மறுபுறம், ஒரு கற்பழிப்பாளருக்கு கட்சி தேர்தலில் சீட் கொடுக்கிறது. இது தவறான முடிவு. இது எங்கள் கட்சியின் பிம்பத்தை கெடுக்கும்.” என மேலும் கூறினார்.

தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா இந்த விஷயத்தை கவனிப்பதாக உறுதியளித்து, இந்தகீழ்த்தரமான எண்ணம் கொண்டவர்கள் அனைவரும் அரசியலில் எப்படி வருகிறார்கள்?? என கேள்வியெழுப்பியுள்ளார்.

முன்னதாக வெள்ளிக்கிழமை, உத்தரபிரதேசத்தில் ஐந்து சட்டமன்ற இடங்களுக்கும், ஜார்க்கண்டில் ஒரு இடத்திற்கும் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதில் பாலியல் \குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள தியோரியாவைச் சேர்ந்த முகுந்த் பாஸ்கர் மணி திரிபாதிக்கும் சீட் கொடுத்தது கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் தற்போது கடும் எதிர்ப்புகளை சந்தித்து, காங்கிரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 40

0

0