கபடி…கபடி: களத்தில் இறங்கி கபடி விளையாடிய நடிகை ரோஜா…!!(வைரல் வீடியோ)

Author: Aarthi Sivakumar
9 March 2021, 11:25 am
roja kabadi - updatenews360
Quick Share

நகரி: நடிகையும் ஆந்திர மாநில எம்எல்ஏவுமான ரோஜா திடீரென களத்தில் கபடி விளையாடி பார்வையாளரகள் அனைவரையும் வியப்படையச் செய்துள்ளார்.

செம்பருத்தி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி 1990களில் முன்னணி கதாநாயகியாக வலம்வந்தவர் நடிகை ரோஜா. பின்னர் உழைப்பாளி, அதிரடி படை, சூரியன், வீரா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். பின்னர் ஆந்திர அரசியலில் ஆர்வம் காட்டிய அவர், தற்போது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

இந்நிலையில், தமது நகரி பகுதியில், நடந்த கபடி போட்டியை தொடங்கி வைக்க ரோஜா சென்றிருந்தார். அப்போது இளைஞர்கள் மற்றும் அப்பகுதி பொது மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் உற்சாகமடைந்த ரோஜா யாரும் எதிர்பாராத நிலையில், திடீரென களத்தில் இறங்கி, அங்கு விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களுடன் கபடி விளையாடினார். இதனால் இளைஞர்களும் நகரி சட்டமன்ற தொகுதி பொது மக்களும் மிகவும் உற்சாகம் அடைந்தனர்.

Views: - 275

0

0