மாடல்களை மிஞ்சும் ராம்ப்வாக்! மாடு நடக்கும் அழகை பாருங்கள்!

28 February 2021, 8:19 am
Quick Share

தெருவில் மாடு ஒன்று அழகிப் போட்டியில் நடப்பது போல் ‘கேட்வாக்’ நடக்க, அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் அந்த மாட்டை, சூப்பர் மாடலான நவோமி காம்ப்பெல் உடன் ஒப்பிட்டு வருகின்றனர்.

அழகிப் போட்டிகளில் கேட்வாக் நடந்து வரும் அழகிகளை பார்த்திருப்பீர்கள். ஒய்யாரமாக அவர்கள் நடந்து வருவதை, பார்வையாளர்கள் வாயை பிளந்து பார்த்து கொண்டிருப்பார்கள். அப்படி பிரபல மாடல்கள் போல, மாடு ஒன்று நடந்து வர, அந்த வீடியோ டுவிட்டரில் வைரலாகி வருகிறது. கால்களை பின்னி, பின்னி அது நடந்து வரும் அழகை கண்ட நெட்டிசன்கள், அந்த மாட்டை பிரபல சூப்பர் மாடல்களுடன் ஒப்பிட்டு வருகின்றனர்.

டுவிட்டர் பயனர் ஒருவர் வெளியிட்ட இந்த வீடியோவை, 27 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்திருக்கிறார்கள். 2,800 பேருக்கும் மேல் ரீடுவிட் செய்துள்ளனர். மாடு கேமராவை நெருங்கும் போது, அதன் பின்னால், வேறு மாடுகளும் நடந்து வருவது தெரிகிறது. நெட்டிசன்கள் பலரும் கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.

முதலில் இந்த வீடியோ 2018 அக்டோபரில் வெளியான நிலையில், மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் தற்போது மீண்டும் வைரலாகி இருக்கிறது. பால் நிறுவனமான லெஸ் புரொடியூட்ஸ் லெய்டியர்ஸ் வெளியிட்ட, இரண்டு வயது நிரம்பிய இந்த வீடியோவை சுமார் 8 மில்லியன் பேர் பார்த்து ரசித்திருக்கிறார்களாம். டுவிட்டர் பயனர் ஒருவர், இதனை 1980ல் பிரபலமான மாடலாக இருந்த நவோமி காம்ப்பெல் உடன் ஒப்பிட்டிருக்கிறார். ஆமாம்.. இந்த மாட்டின் நடையும் பார்க்க அப்படி தாங்க இருக்குது!

Views: - 56

1

0