ஒரு தடுப்பூசி போட இவ்ளோ அலப்பறையா: இணையத்தை சிரிக்க வைத்த இளைஞரின் வீடியோ…நீங்களே பாருங்க!!

Author: Aarthi Sivakumar
24 September 2021, 9:37 am
Quick Share

சீனாவில் துவங்கி உலகெங்கிலும் பேரழிவை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இந்த கொரோனாவை நாம் வீழ்த்த ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. உலகெங்கிலும் கொரோனாவிற்கு தடுப்புமருந்து கண்டுபிடித்து அதனை பயன்பாட்டிலும் கொண்டுவந்துவிட்டன. இதன் விளைவாக, அனைத்து நாடுகளும் தங்கள் குடிமக்களுக்கு தடுப்பூசி போடுகின்றன.

இந்தியாவிலும் தடுப்பூசி பெரிய அளவில் பயன்பாட்டில் உள்ளது. கொரோனாவுக்கு பயந்து பலர் தடுப்பூசி போட முன் வருகின்றனர். சிலர் தடுப்பூசிக்கு பயப்படுகிறார்கள். அப்படிப்பட்ட காணொளி ஒன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.

சிவப்பு சட்டை அணிந்த ஒருவரை அவரது நண்பர்கள் தடுப்பூசி செலுத்துவதற்காக வலுக்கட்டாயமாக தடுப்பூசி மையத்திற்கு அழைத்து வந்தனர். எனினும், தடுப்பூசி போட விருப்பம் இல்லாத அந்த சிவப்பு சட்டை அந்த இடத்தை விட்டு எஸ்கேப் ஆகா பார்க்கிறார் . ஆனால் அவரின் நண்பர்களோ அவரை விடுவதுபோல் தெரியவில்லை.

வலுக்கட்டாயமாக செவிலியரிடம் அழைத்துச் சென்று தடுப்பூசி போடுவதற்காக அவரை தயார்படுத்தினர். தரையில் விழுந்த மீன் துள்ளுவதுபோல் சிவப்பு சட்டை நபரோ தன நண்பர்களுடன் மல்லு கட்ட கீழே படுக்கவைத்து கிடுக்குப்பிடி பிடித்த நண்பர்கள் ஒருவழியாக செவிலியரின் உதவியால் சிகப்புசட்டைக்கு தடுப்பூசி செலுத்தினர்.

இந்த வேடிக்கையான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் தங்கள் பாணியில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Views: - 594

0

0