கட்டு கட்டாக பணம்… கிராம கள உதவியாளர் குடியிருப்பில் நடந்த சோதனை.. திடுக்கிட்டு போன லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்!!

Author: Babu Lakshmanan
26 May 2023, 1:33 pm
Quick Share

கேரள மாநிலம் பாலக்காட்டில் கிராம கள உதவியாளர் குடியிருப்பில் மேற்கொண்ட சோதனையில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ரொக்க பணம் மறைத்து வைத்திருந்தது லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு அவரை கைது செய்தனர்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திற்கு உட்பட்ட பாலக்கயம் கிராம கள உதவியாளர் சுரேஷ்குமார் என்பவர் தொடர்ந்து லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி, அவரது குடியிருப்பில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ரொக்க பணம் மற்றும் புதிய ஆடைகள், தேன், குடம்புளி உள்ளிட்ட பல பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இவர் புதிதாக கட்டும் வீட்டுக்கு அதிக பணம் தேவைப்படுவதால் லஞ்சம் வாங்கியதாக போலீசாரிடம் விசாரணையின் போது கூறியுள்ளார்.

சமீப கால லஞ்ச ஒழிப்புத் துறையினரின் வரலாற்றில் சாதாரண ஒரு ஊழியரிடம் அதிக அளவுத் தொகை பறிமுதல் செய்யப்பட்ட சம்பவமாக இச்சம்பவம் விளங்குகிறது. இவரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரை சிறையில் அடைத்ததோடு, தொடர்ந்து அவரை விசாரணை மேற்கொள்வதற்காக காவலில் எடுப்பதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 282

0

0