எம்பி விஜய் வசந்த் உள்பட புதிய உறுப்பினர்கள் 4 பேர் பொறுப்பேற்பு : பதவி பிரமாணம் செய்து வைத்த சபாநாயகர்..!!

19 July 2021, 12:38 pm
vijay vasanth - updatenews360
Quick Share

டெல்லி : கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் உள்பட 4 பேருக்கு சபாநாயகர் இன்று பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. முதல் நாள் கூட்டத் தொடரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

மக்களவையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்ட 4 பேர் பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பின்னர், எதிர்க்கட்சி எம்.பி.க்களின் சலசலப்புக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் தனது அமைச்சர்கள் சபையை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து மறைந்த மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட பிறகு அவை பிற்பகல் 12.24 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோலவ, மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Views: - 193

0

0

Leave a Reply