சுய தனிமைப்படுத்தலை கடைபிடித்த கிராமம்: கொரோனாவை ஓட ஓட விரட்டிய அதிசயம்..!!

17 May 2021, 5:28 pm
kerala village - updatenews360
Quick Share

இடுக்கி: கேரளாவின் இடுக்கி மாவட்ட கிராமங்களின் பழங்குடியின மக்கள் சுயமாக கடைப்பிடித்த தனிமை கட்டுப்பாடுகள் கொரோனாவை அவர்களிடம் நெருங்கவிடாமல் செய்துள்ளன.

கேரளாவின் இடுக்கி மாவட்ட வனப்பகுதி கிராமங்களில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். சுய தனிமை என்ற மிக புத்திசாலித்தனமான நடவடிக்கை கொரோனா பாதிப்பில் இருந்து இவர்களை முழுமையாக பாதுகாத்துள்ளது.

Corona Cbe - Updatenews360

மூணாறில் இருந்து 30 கி.மீ., தொலைவில் உள்ள எடமலைக்குடி பஞ்சாயத்து தென் மாநிலங்களில் கொரோனா இல்லாத ஒரே பஞ்சாயத்து என பெருமை பெற்று உள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்படும் முன் இங்கு வசிக்கும் 750 குடும்பங்களைச் சேர்ந்த 3,000 பேர் தங்களை சுயமாக தனிமைப்படுத்திக் கொண்டனர்.

இதுபற்றி, ‘எங்கள் நலனுக்காக, நாங்கள் தனிமையில் இருக்கிறோம். இதனால், கொரோனா எங்களை நெருங்கவில்லை’ என கூறி உள்ளனர். மருந்துகள், அத்தியாவசிய பொருட்களுக்காக மட்டுமே வெளியே வந்துள்ளனர். பரிசோதனை உள்ளிட்ட பணிகளுக்காக போலீசார் மற்றும் சுகாதாரத் துறையினரையும் தங்கள் பஞ்சாயத்தில் அவர்கள் அனுமதிக்கவில்லை.

Views: - 167

0

0