நிர்பயா வழக்கில் முக்கிய குற்றவாளியான வினய் சர்மாவின் மனு..! உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

14 February 2020, 3:19 pm
UpdateNews360_Nirbhaya
Quick Share

டெல்லி: நிர்பயா வழக்கில் முக்கிய குற்றவாளியான வினய் சர்மாவின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

டெல்லி மாணவி நிர்பயா பாலியல் வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங், வினய் குமார் சர்மா உள்ளிட்ட 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 4 பேரும் தற்போது டெல்லி திகார் சிறையில் உள்ளனர்.

தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட கருணை மனு, மறுஆய்வு மனு போன்ற சட்ட நடவடிக்கைகளால் தூக்கு தண்டனை 2 முறை தள்ளி போனது. இந் நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான வினய் குமார் சர்மா, தமது கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நேற்று விசாரிக்கப்பட்டது.

அந்த மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூசண், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று அறிவித்தது. அதில், கருணை மனுவை குடியரசுத்தலைவர் உரிய முறையில் ஆராயவில்லை என்ற கருத்தை ஏற்க முடியாது என்றனர்.

 குற்றவாளி வினய் சர்மா நல்ல உடல், மனநலத்துடன் உள்ளார், எனவே  கருணை மனுவை குடியரசுத்தலைவர் நிராகரித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றும் கூறினர்.