ஐதராபாத்தில் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது…!!

1 December 2020, 9:38 am
hydrabath - updatenews360
Quick Share

ஐதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் 150 வார்டுகளை கொண்ட ஐதராபாத் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.

தெலங்கானா மாநிலத்தில் 150 வார்டுகளை கொண்ட ஐதராபாத் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. இந்த தேர்தலில் வெற்றிபெற்று ஐதராபாத் மாநகராட்சி மேயர் மற்றும் உறுப்பினர் பதவியை கைப்பற்றும் நோக்கத்தோடு தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ், பாஜக, அசாதுதீன் ஓவைசியின் அனைத்திந்திய மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

150 வார்டுகளை கொண்ட ஐதராபாத் மாநகராட்சியில் 74.67 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1,122 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் 9,101 வாக்குச்சாவடிகளில் மாநகராட்சி தேர்தல் நடக்கிறது. டிஆர்எஸ் 150, பாஜக 149, காங்கிரஸ் 146, தெலுங்கு தேசம் 10, ஓவைசியின் எஐஎம்ஐஎம் 51 இடங்களில் போட்டியிடுகின்றன.

ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்ற சந்திரசேகரராவின் ஆளும் டிஆர்எஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் இன்று பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Views: - 0

0

0