கேரளாவை அச்சுறுத்தும் கனமழை: அணைப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

Author: Rajesh
15 November 2021, 8:58 am
Quick Share

பத்தினம்திட்டா: கேரளாவில் கன மழை தொடர்ந்து பெய்து வருவதால் முக்கிய அணைகள் திறக்கப்படும் அபாயமும் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் மாநிலத்தின் பல மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழை நீர் வெள்ளமாக பாய்கிறது. எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

latest tamil news

நீர் வரத்து அதிகரித்துள்ளதால் இடுக்கியில் உள்ள அணை நேற்று திறந்து விடப்பட்டது. அணையை ஒட்டியுள்ள இடுக்கி மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பத்தினம்திட்டா மாவட்டத்திலும் கன மழை பெய்து, பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மலைச் சரிவு ஏற்படும் வாய்ப்புஉள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 331

0

0