வெளியாட்கள் போல் பாஜக தொண்டர்கள் மீது குண்டு வீசிய மேற்கு வங்க போலீஸ்..? வைரலாகும் வீடியோ..!

Author: Sekar
8 October 2020, 8:58 pm
Police_Throw_Bomp_UpdateNews360
Quick Share

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசின் கீழ் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதைக் கண்டித்து, இன்று கொல்கத்தாவில் தலைமைச் செயலகத்தை நோக்கி பாஜக இளைஞரணி பேரணி நடத்திய நிலையில், மேற்கு வங்க காவல்துறையின் அராஜகம் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இன்று மாநில செயலகம் நபன்னா நோக்கி கொல்கத்தா மற்றும் ஹவுராவிலிருந்து ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் மாநிலத்தில் மோசமடைந்து வரும் சட்டம் ஒழுங்கை எதிர்த்து அணிவகுக்கத் தொடங்கினர்.

ஹவுரா மாவட்டத்தின் சாந்த்ரகாச்சியில் பாஜக தொண்டர்கள் மீது போலீசார் தடியடி மற்றும் கண்ணீர்ப்புகை மற்றும் நீர் பீரங்கிகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர்.

இதனால் பாஜக மாநில துணைத் தலைவர் ராஜு பானர்ஜி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிர்மோய் சிங் மகாடோ ஆகியோர் காயமடைந்தனர்.

கொல்கத்தாவில் உள்ள ஹேஸ்டிங்ஸ் பகுதியில் சட்டத்தை மீறியவர்கள் மீது தடியடி நடத்தி கூட்டம் கலைக்கப்பட்டது.

இந்நிலையில் கொல்கத்தாவில் பாஜக தொண்டர்கள் மீது வெளியாட்கள் போல் மம்தா பானர்ஜியின் கீழ் செயல்படும் மேற்கு வங்க போலீசே குண்டு வீசி தாக்குவதாகக் கூறப்படும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதில் சில போலீஸ்காரர்கள் ஒரு மாடியின் மீது நின்று தெருக்களில் இருந்த பாஜக தொண்டர்கள் மீது குண்டு வீசி தாக்குவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இது உண்மையில் பங்களாதேஷில் எடுக்கப்பட்ட வீடியோவாக இருக்கலாம் என சிலர் சந்தேகம் கிளப்பியுள்ளனர்.

Views: - 53

0

0