லேசர் மூலம் செயல்படும் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி..! டிஆர்டிஓ இமாலய சாதனை..! (வீடியோ)

1 October 2020, 5:49 pm
DRDO_Arjun_Tank_Laser_Guided_Missile_UpdateNews360
Quick Share

இன்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) அர்ஜுன் பீரங்கியில் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பீரங்கி எதிர்ப்பு லேசர் வழிகாட்டும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது.

மகாராஷ்டிராவின் அகமதுநகரில் உள்ள இந்திய ராணுவத்தின் சோதனை தளத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஒன்பது நாட்களில் டிஆர்டிஓ மேற்கொண்ட இரண்டாவது ஏவுகணை சோதனை இதுவாகும்.  

சீனாவுடன் தொடர்ந்து மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்புகள் புதிய புதிய அமைப்புகளின் தொடர் சோதனைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

டிஆர்டிஓ செப்டம்பர் 23 அன்று ஒரு பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்நிலையில் டிஆர்டிஓ இன்று லேசர் மூலம் வழிகாட்டப்படும் மற்றொரு பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையையும் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை டிஆர்டிஓ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அர்ஜுன் பீரங்கியில் டிஆர்டிஓ நடத்திய சோதனையின் வீடியோவும் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

Views: - 91

0

0