வலிதான் வெற்றியின் ரகசியம் : வாட்ச்மேன் TO ஐ.ஐ.எம் பேராசிரியர் வரை!!

12 April 2021, 7:39 pm
Ranjith Ramachandran -Updatenews360
Quick Share

ஐஐஎம் உதவி பேராசியராக நியமிக்கப்பட்டிருக்கும் ரஞ்சித் என்பவரின் தார்ப்பாய் போர்த்தப்பட்ட, ஓட்டு வீடு, சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. வாழ்வில் பெரும் வெற்றி பெற்ற மனிதர்கள் யாவரும், விளிம்பு நிலையில் இருந்து கோபுர உச்சியை தொட்டவர்கள் தான். அதற்கு பின்னால் அவர்களது கடின உழைப்பும், கனவை நனவாக்க வேண்டும் என்ற வெறியும் இருக்கும். இங்கும் அப்படி ஒருவர் இருக்கிறார். கேரளாவை சேர்ந்த இளைஞர், ஓட்டு வீட்டிலிருந்து, பெரும் கல்வி நிறுவனமான ஐஐஎம்.,ல் உதவிப் பேராசிரியாக இணைந்திருக்கிறார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள இந்திய மேலாண்மை மையத்தில் (ஐஐஎம்) உதவி பேராசிரியராக இணைந்திருக்கிறார் ரஞ்சித் ராமச்சந்திரன். 28 வயது நிரம்பிய இந்த இளைஞர், சமூக வலைதளத்தில், ஐஐஎம் பேராசிரியர் ஒருவர் இங்கு தான் பிறந்தார் என பதிவிட்டு, ஓட்டு வீடு ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.

IIM Professor Ranjith Ramachandran Motivational Story From Watchman To IIM  Ranchi Assistant Professor | झोपड़ी में रहे, रात में चौकीदारी की, अब IIM  में बने प्रोफेसर - Life Hacks | नवभारत टाइम्स

அவரது பதிவில், இடம்பெற்றிருக்கும் வீடு மாளிகையோ, பங்களாவோ கிடையாது. தார்ப்பாய் போர்த்தப்பட்ட ஒற்றை ஓட்டு வீடு தான். அது அவர் பிறந்த வீடு தான்.

ஆம்.. இந்த ஓட்டு வீட்டில் பிறந்தவர் தான், தனது கனவுகளை துரத்தி சென்று, ஐஐஎம்.,மில் பேராசிரியராக இணைந்திருக்கிறார். அவரது பதிவு பலருக்கும் உத்வேகம் அளிக்க, நெட்டிசன்கள் அதனை வைரலாக்கி உள்ளனர்.

வாட்ச்மேன் முதல் ஐ.ஐ.எம் பேராசிரியர் வரை: கேரள டெய்லர் மகன் ரஞ்சித்-ன்  தன்னம்பிக்கைக் கதை!

ரஞ்சித்தின் தந்தை டெய்லர். தாய் அருகில் இருக்கும் வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்திருக்கிறார். ரஞ்சித்தின் உடன் பிறந்தவர்கள் இருவர். 5 பேரும் இந்த சிறு வீட்டில் தான் வசித்து வந்திருக்கின்றனர். எப்படி தனது வாழ்வில் ரஞ்சித் முன்னேறினார் என்பதை அவதே தனது வெற்றிக் கதையை கூறியுள்ளார்.

இது குறித்து முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரஞ்சித், தனது வீட்டின் புகைப்படத்தை பதிவு செய்து இங்கு தான் பிறந்தேன், நான் தற்போது சொல்லப்போகும் எனது கதை என்னை போன்ற கனவுகளுடன் இருக்கும் யாரேனும் ஒருவருக்கு உத்வேகம் கொடுத்தால் அதுவே எனக்கு வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.

10ம் வகுப்பு வரை காசர்கோடு வெல்லாச்சல் பகுதியில் உள்ள பழங்குடி சமூகங்களை சேர்ந்த சிறுவர்களுக்காக அரசு நடத்தும் மாதிரி குடியிருப்பு பள்ளியில் படித்து, ஒரு வழியாக பள்ளிப்படிப்பை நல்ல மதிப்பெண்களுடன் முடித்தேன்.

From watchman to IIM professor: The remarkable journey of Ranjith  Ramachandran

அந்த சமயத்தில் நிதிச்சுமை காரணமாக கல்லூரிப் படிப்பை தொடர முடியாமல், ஒரு கட்டத்தில் கல்லூரி படிப்பே வேண்டாம் என முடிவு செய்தேன். இதையடுத்து தான் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இரவு நேர வாட்ச்மேன் விளம்பர அறிவிப்பை அறிந்து விண்ணப்பித்தேன்.

விண்ணப்பம் செய்த வேலை கிடைத்ததால் எனக்கு அதிர்ஷ்டம் இருப்பதை உணர்ந்தேன், பின்னர் இரவு நேர வாட்ச்மேன் பணியில் இணைந்து காலை கல்லூரி, இரவில் வேலை பார்த்தேன். ஆரம்பத்தில் 3 ஆயிரத்து 500 ரூபாய் சம்பளம் கிடைத்து, பின்னர் 5 ஆண்டுகளில் 8 ஆயிரம் ரூபாயக உயர்ந்தது. தெடாந்து இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளை முடித்து, இதற்கான வரமாக வேறு ஒரு உலகம் கிடைத்தது. அதுதான் ஐஐடி மெட்ராஸ்…

From shanty to IIM! Ranjith's inspirational story is a lesson for youth |  Kerala News | Onmanorama

வித்தியாசமான இடத்தில், ஒரு கூட்டத்தில் தனி மனிதனாக இருப்பது போன்ற உணர்வு, சென்னைக்கு வரும் முன்பு மலையாளம் மட்டுமே தெரியும், ஆனால் ஐஐடியில் சேர்ந்த போது பேச பயந் எனக்கு, இனி சென்னை லாக்கியில்லை என முடிவு செய்த போது, எனது வழிகாட்டி டாக்டர் சுபாஷ் சசிதரன் வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொடுத்தார். தோல்வியை எதிர்கொள்வதை விட அதை எதிர்த்து போராட வேண்டும என உணர்த்தியதால், நான்கு ஆண்டுகளில் பிஎச்டியை முடித்து கடந்த அக்டோபரில் ராஞ்சியில் உதவி பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்து, அதுவும் கிடைத்தது.

இதையடுத்து எனது பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளுக்காக ஒரு வீடு கட்ட முடிவு செய்து கடன் வாங்க வங்கியில் விண்ணப்பித்தேன், பூச்சு கூட இல்லாத சுவர் ஒழுகும் ஓடுகள், மேயப்பட்ட கூரை, வீடு ஒழுகாமல் இருக்க தார்ப்பாய், என இந்த புகைப்படத்தில் உள்ள குடிசையில் இருந்து ராஞ்சி வரையில் எனது பயணம் சுலபமானதாக இல்லை. எனது வீடு போல உள்ள ஆயிரம் குடிசைகளில் இருக்கும் பல கனவுகள் நிறைவேறாமல் உள்ளன. ஆனால் அது போன்று இனி நிகழக்கூடாது என ரஞ்சித் ராமச்சந்திரன் தன்னம்பிக்கையோடு பதிவிட்டுள்ளார்.பலருக்கும் உத்வேகம் அளிக்கும் அவரது கதை நெட்டிசன்களை வியப்புக்குள்ளாக்கி இருக்கிறது.

Views: - 63

0

0