நீர்வீழ்ச்சியில் செல்பி.! கீழே விழுந்த செல்போனை பிடிக்க சென்ற இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!!
5 August 2020, 2:31 pmதெலுங்கானா : நீர்வீழ்ச்சியில் செல்பி எடுக்க முயன்ற போது கைதவறி விழுந்த செல்போனை பிடிக்க சென்ற இளைஞர் நீர்வீழ்ச்சியில் விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில் உள்ள லொத்தி நீர்வீழ்ச்சிக்கு அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஐந்து பேர் பொழுதை கழிப்பதற்காக சென்றிருந்தனர்.
அப்போது அவர்களில் 19 வயதுடைய சச்சின் என்ற இளைஞர் நீர்வீழ்ச்சி மேல் நின்று கொண்டு செல்பி எடுக்க முயன்றார். இந்தநிலையில் அவர் கையிலிருந்த செல்போன் தவறி கீழே விழுந்து நீர்வீழ்ச்சியில் தண்ணீரால் அடித்து
செல்லப்பட்டது.
தவறிவிழுந்த செல்போனை பிடிப்பதற்காக சச்சின் நீர்வீழ்ச்சி வழியாக ஓடினார். அப்போது கால் தவறி விழுந்த சச்சின் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு சுழலில் சிக்கி காணாமல் போய்விட்டார். இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த இந்த சம்பவத்தில் இன்று அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விலையுள்ள பொருட்களுக்காக விலை மதிப்பில்லாத உயிரை விட்ட இளைஞரின் செயல் ஒவ்வொருவருக்கும் பாடமாக அமையும். செல்பி மோகத்தால் மேலும் ஒரு உயிர் பறிபோனது வேதனைதரும் விஷயமாக அமைந்துள்ளது.