“ஆட்சிக்கு வந்தால் போலீசை கால் ஷூவை நக்க வைப்போம்”..! மேற்கு வங்க பாஜக தலைவர் கருத்தால் சர்ச்சை..!

25 November 2020, 10:23 am
Raju_Banerjee_UpdateNews360
Quick Share

மேற்கு வங்க பாஜக தலைவர் ராஜு பானர்ஜி திரிணாமுல் அரசு மீதான கடும் விமர்சனத்தில், குண்டர்கள் ராஜ்ஜியத்தை ஒழிக்க மாநிலத்தில் உள்ள போலீஸ் படை எந்த உதவியும் செய்யவில்லை என்றும், பாஜக ஆட்சிக்கு வந்தால், கட்சி காவல்துறையை காலை நக்கவைப்போம் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று துர்காபூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய ராஜு பானர்ஜி, “மேற்கு வங்கத்தில் இப்போதெல்லாம் என்ன நடக்கிறது என்று பாருங்கள். மாநிலத்தில் குண்டர்களின் ராஜ்ஜியம் மேலோங்கியுள்ளது? போலீசார் எந்த உதவியும் செய்யவில்லை. அத்தகைய போலீசாரை என்ன செய்ய வேண்டும்? நாங்கள் அவர்களை பூட்ஸ் நக்க வைப்போம்.” எனக் கூறினார்.

மம்தா பானர்ஜி அரசாங்கத்தின் கீழ் மேற்கு வங்கத்தில் சட்டவிரோத செயல்கள் பெருகியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், பாஜக தலைவர்கள் இதற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்ஜியா நேற்றைய போராட்டத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு மாநிலத்தில் மிக மோசமாக உள்ளது என்று கூறினார்.

பாஜகவின் வங்காள பொறுப்பாளராக இருக்கும் விஜயவர்கியா, முழு நாட்டிலும் ஒரு சட்டம் உள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் மட்டும் திரிணாமுல் கட்சியின் விதிகள் மட்டுமே அமலில் உள்ளன எனக் கூறினார்.

“வங்காளத்திற்கு ஒரு பெண் முதலமைச்சர் இருக்கிறார். ஆனால் மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் வங்காளத்தில் பெண்கள் பாதுகாப்பு மிக மோசமாக உள்ளது. சட்டம் ஒழுங்கு நிலைமை மாநிலத்தில் முற்றிலும் மோசமடைந்து விட்டது” என்று அவர் மேலும் கூறினார்..

Views: - 0

0

0