‘இனி எங்கு சென்றாலும் மாஸ்க் கட்டாயம்…அலட்சியமா இருக்காதீங்க’: மீண்டும் தலைதூக்கும் கொரோனா…கேரள அரசு அதிரடி அறிவிப்பு..!!

Author: Rajesh
27 April 2022, 4:37 pm
Quick Share

கேரளா: கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை கட்டுக்குள் வந்தாலும் கடந்த சில நாட்களாக தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை பல்வேறு மாநிலங்கள் கட்டாயமாக்கியுள்ளது.

குறிப்பாக, தென்னிந்தியாவிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பும், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கேரளாவில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பொது இடங்கள், மக்கள் கூடும் இடங்கள், பணியிடங்கள் மற்றும் போக்குவரத்தின் போது முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர இனி பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் சென்றால் தண்டனைகளும் அபராதமும் விதிக்கப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

Views: - 757

0

0