ரயிலில் பயணம் செய்ய ‘நோ கொரோனா’ சான்றிதழ் கட்டாயம்: மேற்கு வங்காள அரசு அறிவிப்பு..!!

7 May 2021, 9:49 am
Indian_Railway_UpdateNews360
Quick Share

கொல்கத்தா: மேற்கு வங்காளத்திற்கு ரயிலில் வரும் பயணிகள் தங்களுடன் கொரோனா தொற்றில்லா சான்றிதழ் கொண்டு வருவது கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது.

மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்புகள் சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனை முன்னிட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி உள்ளது. இதேபோன்று மாநிலத்திற்கு வருகை தரும் ரயில் பயணிகள் ரயிலில் ஏறும்பொழுதும், பயணம் மற்றும் இறங்கும்பொழுதும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

ரயில் புறப்படுவதற்கு முன் 72 மணிநேரத்திற்குள் கொரோனா தொற்றில்லை என்ற ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை முடிவுக்கான சான்றிதழை தங்களுடன் பயணிகள் கொண்டு வருவது கட்டாயம் என்றும் அரசு அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.

Views: - 115

0

0