“என் பொண்டாட்டிய திருப்பி அனுப்புங்க”..! மாமியார் வீட்டின் முன் தர்ணாவில் குதித்த கணவன்..!

28 September 2020, 1:26 pm
Police_UpdateNews360 (2)
Quick Share

28 வயதான அலோக் மாலிக் என்ற இளைஞர் ஒருவர் இன்று மேற்கு வங்காளத்தின் நதியா மாவட்டத்தில் தனது மாமியார் வீட்டிற்கு வெளியே தர்ணாவில் அமர்ந்து, தனது மனைவியை தனது வீட்டிற்குத் திரும்ப அனுமதிக்குமாறு கோரினார். இருவரும் காதலித்து வந்த நிலையில் 18 வயதை எட்டிய பின்னர் சமீபத்தில் சங்கீதா கோஷ் எனும் பெண்ணை அலோக் மாலிக் திருமணம் செய்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

அவரது குடும்பத்தினர் அதற்கு எதிராக இருந்தபோதும் சங்கிதா அலோக்கை மணந்தார். ஒரு புகைப்பட ஸ்டுடியோ வைத்திருக்கும் அலோக், ஒரு கோவிலில் இந்து சடங்குகளின்படி அவர்களது திருமணம் நடந்தது என்றும் அது சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

சமீபத்தில் சங்கிதா தனது பெற்றோரை ஹரிங்கட்டா காவல் நிலைய பகுதியில் உள்ள சோனகாலி கிராமத்தில் உள்ள தங்கள் வீட்டில் பார்க்கச் சென்றதாகவும், அதன் பின்னர் அவரது குடும்பத்தினர் திரும்பி வர அனுமதிக்கவில்லை என்றும் கூறினார். அவர்கள் அவளைத் தாக்கி வேறு எங்காவது அனுப்பியிருக்கலாம் என சந்தேகிக்கும் அலோக், சங்கீதாவை விடுவிக்கக் கோரினார்.

திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் திருமண சான்றிதழின் நகலைக் கொண்டிருந்த பலகைகளுடன், அலோக் தனது மாமியார் வீட்டிற்கு வெளியே தர்ணாவில் அமர்ந்தார். சங்கீதாவை விடுவிப்பதில் தனக்கு உதவுமாறு உள்ளூர்வாசிகளையும் அவர் கேட்டுக்கொண்டார்.

தனது மனைவியை மீட்கும் வரை போராட்டத்தைத் தொடர உள்ளதாக அலோக் கூறினார். இதற்கிடையே அண்மையில் சங்கிதாவின் குடும்பத்தினர் அலோக்கிற்கு எதிராக ஹரிங்கட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் விசாரணையின் பின்னர், அவர்கள் குற்றச்சாட்டுகளில் எந்த பொருளும் இல்லை என்பதை காவல்துறை உணர்ந்தது.

“நாங்கள் கணவனையும் விசாரித்தோம். ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் கிடைக்கவில்லை” என்று ஒரு அதிகாரி கூறினார். இன்று அதிகாலையில் தொடங்கிய தர்ணா, அப்பகுதியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 11

0

0