சபாநாயகர் தேர்தல், சட்டசபை கூட்டம் புறக்கணிப்பு..! தேர்தலுக்கு பிந்தைய வன்முறைக்கு நீதிகேட்டு மேற்குவங்க பாஜக போராட்டம்..!

7 May 2021, 6:55 pm
dilip_ghosh_updatenews360
Quick Share

மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் மாநிலத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைக்கு எதிராக பாஜக சார்பாக போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். மேலும், பாஜக சபாநாயகர் தேர்தலில் பங்கேற்காது மற்றும் சட்டசபை அமர்வுகளில் கலந்து கொள்ளாது என்றும் கூறியுள்ளது.

பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை தங்கள் எதிர்ப்பு தொடரும் என திலீப் கோஷ் தெரிவித்துள்ளார்.

மே 2’ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் வன்முறை பதிவாகியுள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையில் ஒன்பது பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டதாக பாரதிய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது. இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை திரிணாமுல் கட்சி மறுத்துள்ளது.

இதற்கிடையே, நேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாநிலத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையில் 16 பேர் உயிர் இழந்துள்ளதாகவும், அவர்களது குடும்பங்களுக்கு தலா ரூ .2 லட்சம் இழப்பீடு வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.

அப்போது பாஜகவை விமர்சித்த மம்தா பானர்ஜி, பாஜக மக்கள் ஆணையை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், மத்திய தலைவர்கள் மாநிலத்தில் வன்முறையைத் தூண்டுவதாகவும் குற்றம் சாட்டினார்.

“நான் முதல்வராக பதவியேற்று 24 மணிநேரம் கூட ஆகவில்லை. அதற்குள் ஒரு மத்திய குழு வரத் தொடங்கியது. இதற்குக் காரணம், பாஜக பொது மக்களின் ஆணைக்கு இன்னும் இணங்கவில்லை. மக்கள் ஆணையை ஏற்க பாஜக தலைவர்களைக் கோருவேன்.” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதற்கிடையில், மேற்கு வங்காள வாக்கெடுப்பிற்குப் பிந்தைய வன்முறைக்குப் பின்னால் உள்ள காரணங்களை ஆராய மத்திய உள்துறை அமைச்சகத்தின் நான்கு பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு மேற்குவங்காளத்தில் தனது ஆய்வை மேற்கொண்டு வருகிறது.

Views: - 120

0

0