மேற்கு வங்கத்தில் பனி மூட்டத்தினால் வாகன விபத்து : 18 பேர் பலி… பிரதமர் மோடி இரங்கல்!!

Author: Babu Lakshmanan
28 November 2021, 5:59 pm
Quick Share

கடும் பனி மூட்டத்தின் காரணமாக எதிரெதிரே வந்த வாகனங்கள் மோதிய விபத்தில் 18 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடியா மாவட்டத்தில் ஹன்ஸ்கலியில் நெடுஞ்சாலையில் இறந்தவர் உடல் மற்றும் 35 பேருடன் சென்ற மினி டிரக் ஒன்று மற்றொரு டிரக் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே 12 பேர் பலியாகினர். மேலும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் 6 பேர் உயிரிழந்தனர். கடும் பனி மூட்டம் காரணமாக, எதிரே வந்த வாகனம் தெரியாததால், இந்த விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சாலை விபத்தில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து கடும் வேதனை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, காயம் அடைந்தவர்கள் விரைவாக குணம் அடைய விரும்புவதாகவும் தெரிவித்துளார்.

Views: - 360

0

0