என்னது 1963வது ஆண்டிலேயே ஒமிக்ரான் வந்தாச்சா? contagianஐ தொடர்ந்து நெட்டிசன்களின் புது குழப்பம்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 December 2021, 5:22 pm
Omicron - Updatenews360
Quick Share

தென்னாப்பிரிக்காவின் பிறப்பிடமான ஒமிக்ரான் தொற்றகை கண்டு உலக நாடுகள் அச்சப்படும் வேளையில் 1963வது ஆண்டிலேயே ஒமிக்ரான் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவால் உலக நாடுகள் அச்சப்பட வேளையில், பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை, தடுப்பூசி, ஊரடங்கு என ஒரு பிரளயமே உண்டாச்சு. ஆனால் கொரோனா காலம் முடிந்து தற்போது தான் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.

ஆனால் அந்த சந்தோஷத்திற்கும் புதிய ஆப்பு வந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவியதாக கூறப்படும் புதிய வகை கொரோனா தொற்றுக்கு ஒமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஒமிக்ரான் தொற்று இன்னும் என்னவெல்லாம் பண்ணுமோ என்ற அச்சத்தில் மக்களும், அரசுகளும் உள்ள நிலையில் 1963வது ஆண்டிலேயே ஒமிக்ரான் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Fact check: Is there a movie called 'The Omicron Variant'? Viral poster is  fake | Trending & Viral News

விசாரித்து பார்த்தால் 1963 ஆம் ஆண்டே தி ஒமிக்ரான் வேரியண்ட் என்ற பெயரில் இத்தாலியில் திரைப்படம் வெளியானதாக நெட்டிசன்கள் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். பூமி கல்லறையாக மாறிய நாள் என்ற அந்த படத்தின் கேப்ஷன்தான் அதிர்ச்சியை கொடுக்கிறது. இந்த போஸ்டரை இயக்குநர் ராம்கோபால் வர்மா உட்பட பலர் சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

இதற்கு முன்னர் கொரோனா பரவிய போது contagian என்ற திரைப்படத்தின் போஸ்டரை நெட்டிசன்கள் ஷேர் செய்தனர். உயிரை கொல்லும் வைரசுக்கு எதிராக மருத்துவக் குழு போராடும் கதையாக அந்த படம் இருந்தது. இது குறித்த போஸ்டர் அப்போது பரவலாக பகிரப்பட்டது.

Views: - 202

0

0