தற்போதைய சூழலில் இந்தியாவில் தேர்தல் நடந்தால் யார் வெல்வார்? இந்தியா டுடே கணிப்பு!!
22 January 2021, 12:42 pmதற்போதை சூழலில் இந்தியாவில் தேர்தல் நடந்தால் யார் வெற்றி பெறுவார்கள் என்றும் இந்தியா டுமே நிறுவனம் நடத்திய சர்வே வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா காலம் முடிந்து தற்போது மெல்ல மெல்ல பழைய நிலையில் இந்தியா திரும்பி வருகிறது. இந்த நிலையில் தேச்தின் மனநிலை என்ற தலைப்பில் இந்திய டு நிறுவனம் மக்களிடம் நடத்திய ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளது.
கடந்த ஜனவரி 3ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடத்திய கருத்துக்கணிப்பில் மக்களிடம் கொரோனா காலம் குறித்து எழுப்பட்ட கேள்விக்கு மோடியின் அரசுக்கு அதிகமான ஆதரவுகளை கொடுத்துள்ளனர்.
கொரோனா காலத்தை மோடி அரசு கையாண்ட விதம் குறித்து 73% மக்கள் மோடியின் அரசுக்கு ஆதரவாகவும், அரசின் செயல்பாடுகள் திருப்தி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் மாநில அரசுகள் செயல்படுகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு மாநில அரசுகளில் நடவடிக்கைகள் திருப்தி என 73 % சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதே போல கொரோனா பேரிடர் காலத்தில் வருவாய் இழப்பு மற்றும் வேலையிழப்பு குறித்து எழுப்பிய கேள்விக்கு, 85% மக்கள் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுத்தியதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
கொரோனா கட்டுப்படுத்துவதில் பிறநாடுகளின் செய்லபாடுகள் எப்படி என்ற கேள்விக்கு, ஆஸ்திரேலிய நாட்டின்செயல்பாடு நன்றாக இருந்ததாக 94% மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதே போல ஜெர்மனி நாட்டின் நடிவடிக்கைக்கு 88% மக்கள் ஆதரவும், இந்திய அரசின் நடவடிக்கைக்கு 73% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கொரோனா சிகிச்சை எங்கு தரமாக கிடைக்கிறது என்ற கேள்விக்கு 61%மக்கள் அரசு மருத்துவமனையையே பரிந்துரைத்துள்ளனர். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உதவியதா என்ற கேள்விக்கு 39% மக்கள் மட்டுமே ஆம் என ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கொரோனா தடுப்பூசியை செலுத்த விருப்பமா என்ற கேள்விக்கு 76% சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இலவச கொரோனா தடுப்பூசியை எதிர்பார்க்கறீர்களா என்ற கேள்விக்கு 92% மக்கள் ஆம் என தெரிவித்துள்ளனர்.
அதே போல இன்றைய சூழலில் இந்திய தேர்தல் நடந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டதற்கு, 43% மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க விருப்பம் என தெரிவித்துள்ளனர். அதன்படி கணக்கிட்டால் 321 இடங்கள் பாஜக கூட்டணி வெல்ல வாய்ப்புள்ளது.
இதே போல காங்கிரஸ் கூட்டணிக்கு 27% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால், 93 இடங்கள் வெல்ல வாய்ப்புள்ளது. மேலும் 30% மக்கள் இதர மாநில கட்சிகளை தேர்வு செய்துள்ளதால் மற்ற கட்சியினர் 129 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளது.
பிரதமர் மோடியின் செயல்பாடு எப்படி என்ற கேள்விக்கு 44% மக்கள் பிரதமர் மோடியின் செயல்பாடு மிகசிறப்பு என்றும், 30% மக்கள் சிறப்பு என்றும், 17% மக்கள் சராசரியாக செயல்படுகிறார் என்றும், 6% மக்கள் மிக மோசம் என தெரிவித்துள்ளனர்.
0
0