100 சவரன், 1 ஏக்கர் நிலம், கார் கொடுத்தும் பத்தல.. மர்மமான முறையில் மனைவி மரணம்.. அரசு உத்யோக மாப்பிள்ளை கைது!!

23 June 2021, 6:30 pm
Kerala Murder - Updatenews360
Quick Share

கேரளா : திருமணமான ஒரே வருடத்தில் வரதட்சணை கொடுமை செய்து மர்மமான முறையில் மனைவி இறந்த நிலையில் கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த விஸ்மயா என்ற 24 வயது இளம்பெண் ஆயுர்வேத மருத்துவம் படித்திருந்தார். கடைசி வருட படிப்பின் போதே மகளுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்கள், மோட்டார் வாகனத்துறையில் நல்ல மாப்பிள்ளை என கட்டிக்கொடுத்துள்ளனர்.

கடந்த வருடம் மார்ச் மாதம் திருமணம் முடிந்த கையோடு, 100 சவரன் நகை, 1 ஏக்கர் நிலம், 1 கார் என வரதட்சணையாக கொடுத்துள்ளனர். திருமணம் முடிந்து கொஞ்ச நாள்தான் சந்தோஷமாக இருந்திருக்கிறார் விஸ்மையா.

 சரண்

மேலும் வரதட்சணை வேண்டும் என விஸ்மையாவை துன்புறுத்தி வந்துள்ளார். நாளுக்கு நாள் கொடூர புத்தி மாறிய கணவன் ஆணிகளை கொண்டு விஸ்மையா முகத்தில் குத்தி கட்டைகளால் தாக்கி எட்டி எட்டி வயிற்றிலேயே உதைத்துள்ளார்.

இந்த நிலையில் மகளை பார்க்க சென்ற தந்தை, கணவர் வீட்டாரின் துணிமணிகளை துவைப்பதை பார்த்து நொந்து போன அவர், அடுத்த நாளே ஒர வாஷிங் மெஷின் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் பெற்றோர் முன்னிலையில் மகளை மாப்பிள்ளை தாக்கியுள்ளளார். அப்போதே இது குறித்து பெற்றோர்கள் மாப்பிள்ளை மீது புகார் கொடுத்து, அவர்களும் வார்னிங் கொடுத்துள்ளனர்.

சரண்

ஆனால் நாளுக்கு நாள் அரசு பணி மாப்பிள்ளைக்கு கோர புத்திதான் இருந்தது. டார்ச்சர் தாங்க முடியாமல் விஸ்மையா பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். ஆனால் மாப்பிள்ளை மதுபோதையில் மனைவியை அழைத்து வர வந்துள்ளார். அப்போது தான் இவன் குடிப்பான் என மகள் வீட்டாருக்கு தெரிந்துள்ளது.

பின்னர் இனி குடிக்க மாட்டேன் என மனைவியிடமும், மனைவி வீட்டாரிடமும் சத்தியம் செய்து சமாதானம் செய்து விஸ்மையாவை அழைத்து சென்றான். ஆனால் அங்கு போனதும் குடி, உதை, அடி என நாளுக்கு நாள் கொடுமை தொடர்ந்தது.

இங்கு நடக்கும் கொடுமைகளை பற்றி விஸ்மையா தனது அம்மாவிடம் அடிக்கடி சொல்லி அழுதுள்ளார். இந்த நிலையில் கணவன் வீட்டில் விஸ்மையா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தூக்கில் தொங்கியபடி இறந்த நிலையில் மீட்ட போலீசார் விசாரணையை துவக்கினர்.

விஸ்மயா

விஸ்மையாவின் தந்தை இது கொலைதான் என அடித்து சொன்னார்கள்.. இறப்புக்கு முந்தைய நாள் கல்லூரி தேர்வு உள்ளது என்றும் கூறி அனுமதிக்கவில்லை என என்னிடம் கூறியதாக தந்தை போலீசார் தெரிவித்துள்ளார்.

இதனால் விஸ்மையா கணவன் கிரண்குமாரை போலீசார் அழைத்து சென்ற போது தலைமறைவாகி விட்டார். இதையடுத்து அவனே போலீசில் சரணடைந்தான், பின்னர் அவன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதனிடையே இவனின் கொடூரபுத்தியை பார்த்து கேரள அரசு இவனை பணியில் இருந்து நீக்கியுள்ளது. விஸ்மையாவின் மரணம் கேரளாவில் பெரும் அதிர்வலைகசளை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் 2016 முதல் 2020 வரை 56 வரதட்சனை மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது..

Views: - 325

0

0