கணவரின் கண் முன்னே கொடூரம் : கதற கதற மனைவியை சீரழித்த கும்பல்… மாநிலத்தை உலுக்கிய சம்பவம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
10 September 2021, 5:01 pm
Andhra Rape- Updatenews360
Quick Share

ஆந்திரா : குண்டூர் அருகே நேற்று இரவு கணவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்த பெண்ணை பலவந்தமாக தூக்கிச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள செட்டனப்பள்ளியை சேர்ந்த பெண் ஒருவர் கணவருடன் அருகிலுள்ள பாலடுகு கிராமத்தில் உறவினர் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்தார்.

நிகழ்ச்சி முடிந்து நேற்று இரவு அவர்கள் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களை வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று பெண்ணின் கணவனை கடுமையாக தாக்கி மரத்தில் கட்டி வைத்தனர்.

பின்னர் அந்த பெண்ணை அருகில் உள்ள வயல்வெளிக்கு தூக்கி சென்று எட்டு பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. இதுபற்றி அந்தப் பெண் கணவருடன் சேர்ந்து செட்டனபள்ளி காவல்நிலையத்தில் நேற்று இரவு புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடயறிவியல் துறை அலுவலர்களுடன் சேர்ந்து ஆதாரங்களை சேகரித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.

இந்த நிலையில் அதே பகுதியில் குளிர்பதன கிடங்கு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் எட்டு இளைஞர்கள் ஒன்று சேர்ந்து இந்த படுபாதக செயலை அரங்கேற்றி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் 8 பேரை பிடித்து விசாரணை நடத்துகின்றனர்.

Views: - 209

0

0