வெளிநாட்டில் இருந்து வந்த கணவனை வீட்டில் அனுமதிக்க மறுத்த மனைவி!
18 August 2020, 2:46 pmகேரளா : வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த கணவனை வீட்டிற்குள் அனுமதிக்க மனைவி மறுத்ததால் கேட்டின் வெளியே கணவன் பரிதாபமாக நின்ற காட்சி வலைதளங்களில் உலா வருகிறது.
கொரோனா பீதியால் வெளிநாடுகளில் தங்கி வேலை செய்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். அப்படி வருவபவர்கள் தகுந்த சோதனைக்கு பின்பே கொரோனா இல்லை என உறுதி செய்து அனுப்பப்படுகின்றனர்.
அப்படி வந்தவர்தான் மதுரையை சேர்ந்த பாஸ்கரன். தனது மனைவியை கேரளாவில் உள்ள அவரது வீட்டில் அமர்த்திவிட்டு வெளிநாடு சென்றவர், திரும்பி கேரளாவிற்கு சென்றார். ஆனால் மனைவி வீட்டிற்குங்ள அவரை அனுமதிக்காமல் வெளியே காக்க வைத்துள்ளார்.
தான் அனைத்து சோதனையும் செய்துவிட்டேன், எனக்கு ஒன்றுமில்லை என்று கூறியும் மனைவி கதவை திறக்காமல் வீட்டில் கேட்டையும் திறக்காமல் இருந்துள்ளார். இதையறிந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் பாஸ்கரன் மனைவியிடம் எடுத்துக்கூறியும் மனைவி மறுத்துள்ளார்.
இதையடுத்து அந்த பகுதி கவுன்சிலர் ராஜேஷ் என்பவர் வந்து, பாஸ்கரின் மனைவியிடம் பேசியுள்ளார். ஆனால் அப்போதும் கணவரை வீட்டில் அனுமதிக்க மனைவி மறுத்துவிட்டார். இதையடுத்து உள்ளே நின்றிருந்த காரை எடுத்து நான் மதுரை செல்கிறேன் கேட்டை மட்டும் திறந்து விடு என கணவர் கெஞ்சினார்.
அப்போதும் மனம் தளராமல் விடாப்பிடியாக இருந்துள்ளார் மனைவி. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கேட்டை உடைத்து உள்ளே சென்ற கணவர், காரை எடுத்துக்கொண்டு நேராக மதுரை சென்றுவிட்டார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா சோதனையால் கணவன் மனைவியிடையே பிரிவு உண்டானதுதான் மிச்சம்.