கணவன் தவறு செய்வதை தட்டிக்கேட்ட மனைவி: டம்பிள்ஸ் மூலம் அடித்து கொலை செய்ய முயன்ற அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்…

10 September 2020, 10:37 pm
Quick Share

ஆந்திரா: ஆந்திராவில் தவறு செய்வதை தட்டிக்கேட்ட மனைவியை உடற்பயிற்சி செய்ய பயன்படுத்தும் டம்பிள்ஸ் மூலம் அடித்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கொவ்வூரை சேர்ந்த தம்பதி சீனு,மாதவி. சீனு ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணியாற்றுகிறார். மது,மாது ஆகிவை உள்ளிட்ட அனைத்து பழக்கங்களுக்கும் அடிமையான சீனுவை மனைவி மாதவி தட்டி கேட்டார். இதனால் மனைவி மாதவி மீது கடும் கோபம் கொண்ட சீனு அவரை சில நாட்களுக்கு முன் கொலை செய்ய முயன்றார். சீனுவின் பழக்கவழக்கங்கள் தொடர்பாக இன்று மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது கோபத்தின் உச்சிக்கு சென்ற சீனு உடற்பயிற்சி செய்ய பயன்படுத்தும் டம்பிள்சை எடுத்து மாதவி தலைமீது கடுமையாக தாக்கி மீண்டும் இன்று கொலை செய்ய முயன்றார். படுகாயமடைந்த மாதவி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். கொலை முயற்சி பற்றி மாதவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் ஆந்திர ஆளும் கட்சி பிரமுகர் ஒருவரின் தலையீடு காரணமாக சீனு மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சீனு தலைமறைவு ஆகியுள்ளார்.

Views: - 10

0

0