கால்வாயில் தண்ணீர் அருந்த சென்ற காட்டுயானைகள்: வெளியே வரமுடியாமல் சிக்கித் தவித்த காட்சி!!(வீடியோ)

Author: Aarthi Sivakumar
11 January 2022, 11:55 am
Quick Share

கர்நாடகாவில் தண்ணீர் குடிக்க கால்வாயில் இறங்கி மேலே வரமுடியாமல் சிக்கிக்கொண்ட காட்டுயானைகளின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

கர்நாடக மாநிலம் நாகர்ஹோளே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 காட்டுயானைகள் அருகே உள்ள கால்வாயில் தண்ணீர் குடிக்க இறங்கியுள்ளது. தண்ணீரை குடித்து முடித்த யானைகள் கால்வாயில் இருந்து வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டன.

வனத்துறையினரும் யானைகளை வெளியே கொண்டு வர முயற்சி செய்துள்ளனர். இந்நிலையில் நீண்ட நேரத்துக்கு பிறகு கால்வாயில் சிறிது தூரம் நடந்து சென்ற காட்டுயானைகள் கால்வாய்களில் அமைக்கப்பட்ட படிக்கட்டுகளில் வழியாக வெளியேறி காட்டுக்குள் சென்றன.

கால்வாயில் சிக்கிய யானைகள் வெளியே வர முயற்சித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Views: - 177

0

0