திருப்பதி இடைத்தேர்தலில் கள்ள ஓட்டுக்கள் பதிவா? எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!!

17 April 2021, 10:50 am
Tirupati Bye Election -Updatenews360
Quick Share

ஆந்திரா : திருப்பதி பாராளுமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவில் ஆளும் கட்சி ஆதரவுடன் கள்ள ஓட்டு போடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

திருப்பதி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. தேர்தல் களத்தில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், முக்கிய எதிர்க்கட்சியான தெலுங்குதேசம் மற்றும் பாரதிய ஜனதா, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களும் சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை வாக்குப்பதிவு துவங்கியது முதலே மாநில ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர், பெருமளவில் கள்ள ஓட்டுகளை போடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்தநிலையில் வெளியூர்களிலிருந்து கார்கள், பேருந்துகள் ஆகியவற்றில் கள்ள ஓட்டு போடுவதற்காக ஆண்கள் பெண்கள் என்று ஏராளமானோரை அழைத்து வந்த வாகனங்களை மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் தொண்டர்கள் ஆகியோர் தடுத்து நிறுத்தி இதுபற்றி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

மேலும் அவர்களிடம் போலி வாக்காளர் அடையாள அட்டைகள் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் ஏற்பட்டுள்ளன. வாக்குப்பதிவு மையங்களில் ஓட்டு போடுவதற்காக ஏராளமான அளவில் போலி வாக்காளர்கள் இருப்பது பற்றி போலீசாரிடம் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் வாக்குப்பதிவு மையத்தில் பணியில் இருக்கும் அதிகாரி புகார் அளித்தால் மட்டுமே இதுபோன்ற புகார் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று அவர்கள் கூறி விட்டதாக எதிர்க் கட்சியினர் கூறுகின்றனர்.

திருப்பதி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் மக்கள் மத்தியில் ஆதரவு உள்ளது என்று தம்பட்டம் அடித்து கொள்வதற்காகவே இது போன்ற முறைகேடுகளில் ஆளுங்கட்சியினர் ஈடுபடுகின்றனர் என்று எதிர்கட்சியினர் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறும் சமயத்தில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுப்பது வழக்கம்.

ஆனால் திருப்பதியில் கள்ள ஓட்டுக்கள் காரணமாக தங்களுடைய செலுத்தும் உரிமையை இழந்த வாக்காளர்கள் நடைபெற்று வரும் தேர்தலை ரத்து செய்து வேறொரு நாளில் திருப்பதி பாராளுமன்ற தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். மொத்தத்தில் திருப்பதியில் தற்போது நடைபெறுவது கள்ள ஓட்டு திருவிழாவாக உள்ளது என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக ஏற்பட்டுள்ளன.

Views: - 51

0

0