எந்த சூழலிலும் உதவி செய்வேன் : கொரோனா பாதித்த நடிகர் சோனு சூட் டிவிட்டரில் பதிவு!!

17 April 2021, 4:02 pm
Sonu Sood -Updatenews360
Quick Share

கொரோனா 2வது அலை இந்தியாவை பதம் பார்த்து வருகிறது என்றே சொல்லலாம். அந்தளவிற்கு கொரோனா பாதிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள், பிரபலங்கள் என ஒவ்வொரு நாளும் கொரோனாவுக்கு ஆளாகி வருகின்றனர்.

அந்த வகையில் அக்ஷ்ய்குமார், கத்ரினா கைப், லோகேஷ் கனகராஜ், சுந்தர் சி, பவன் கல்யாண என பலருக்கு கொரோனா பாதித்த வகையில் தற்போது நடிகர் சோனு சூட்டிற்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று எனக்கு கொரோனா பாசிட்டிவ் என்று பரிசோதனையில் தெரிந்துள்ளது என்பதால் என்னை நான் தனிமைப்படுத்திக்கொண்டேன் என்றும், முன்பை விட உங்கள் சிரமங்களை சரிசெய்ய இப்போது எனக்கு அதிக நேரம் கிடைக்கும் என பதிவிட்டுள்ளார்.

எந்த பிரச்சனையிலும் நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன் என்றும் நடிகர் சோனு சூட் பதிவு செய்துள்ளார், மேலும் எந்த சூழலிலும் உதவிசெய்வேன் என தெரிவித்துள்ளார்.

Views: - 18

0

0