குழந்தை பெற்ற 14 நாட்களில் கொரோனா தடுப்பு பணிக்கு திரும்பிய பெண் அதிகாரி…!!

Author: Aarthi
13 October 2020, 10:07 am
up lady ias - updatenews360
Quick Share

உத்தர பிரதேசத்தில் குழந்தை பெற்ற 14 நாட்களில் கொரோனா தடுப்பு பணிக்கு திரும்பி பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி அனைவரும் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

காசியாபாத்: உத்தர பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்தில் வசித்து வருபவர் சவுமியா பாண்டே. இவர் கடந்த ஜூலை மாதம் முதல் காசியாபாத்தில் கொரோனா தடுப்பு அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டார்.

கடந்த செப்டம்பர் மாதம் வரை பணியில் இருந்த கர்ப்பிணியான சவுமியா பிரசவ விடுப்பு எடுத்து கொண்டு விடுமுறையில் சென்றார். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பின்னர், 2 வாரங்களில் பணிக்கு திரும்பி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்பொழுது, நான் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி. அதனால் எனது பணியை நான் கவனிக்க வேண்டும். கொரோனா பாதிப்புகளால் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. குழந்தை பெற்று கொள்வதற்கும், குழந்தையை கவனிப்பதற்கும் தேவையான வலிமையை பெண்களுக்கு கடவுள் வழங்கி உள்ளார். இதேபோன்று எனது குழந்தையுடன் நிர்வாக பணியை நான் கவனித்து கொள்வதென்பது கடவுளின் ஆசியாகும் என தெரிவித்துள்ளார்.

Views: - 37

0

0