கனவில் பல முறை பாலியல் பலாத்காரம்.. பூசாரி மீது பெண் விசித்திர புகார் : ‘மன்மதன்‘ பட பாணியில் நடந்த உண்மை சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 June 2021, 5:26 pm
manmadhan Film True - Updatenews360
Quick Share

பீகார் : பீகாரில் பிரசாந்த் சதுர்வேதி என்ற பூசாரி தனது கனவில் வந்து தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக பெண் ஒருவர் போலீசாரிடம் புகார் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது.

பீகார் அவுரங்காபாத் மாவட்டத்தில் வசிக்கும் ஒரு பெண், தனது மகன் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், கடந்த ஜனவரியில் பூசாரி பிரசாந்த் சதுர்வேதியை அணுகியிருந்தார்.

அப்போது, அந்த சதுர்வேதி அந்த பெண்ணின் மகனுடைய உடல்நிலையை சரிசெய்வதற்காக ஒரு மந்திரத்தை கொடுத்து,சில சடங்கு முறையையும் செய்ய சொன்னார். ஆனால்,அந்த பெண்ணின் மகன் 15 நாட்களுக்குப் பிறகு இறந்தார்.

இந்நிலையில் தனது மகன் இறந்த பிறகு சதுர்வேதி வசிக்கும் காளி கோயிலுக்குச் சென்று,தனது மகன் எப்படி இறந்தார் என்பதை தெளிவுபடுத்தும்படி கேட்டார். ஆனால்,சதுர்வேதி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும்,ஆனால்,இறந்த தனது மகன் தன்னை காப்பாற்றியதாகவும் அந்த பெண் உள்ளூர் போலீசாரிடம் தெரிவித்தார்.

மேலும், சதுர்வேதி தொடர்ந்து தனது கனவில் வருவதாகவும்,பலமுறை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அந்த பெண் ஒரு அதிர்ச்சியான குற்றச்சாட்டை கூறினார்.

இதுகுறித்து உள்ளூர் போலீசார் ஒருவர் கூறுகையில் : சதுர்வேதிக்கு எதிராக எழுத்துப்பூர்வமாக புகார் எங்களுக்கு வந்திருந்தது. இதையமுத்து சதுர்வேதியிடம் சென்று புகார் குறித்து விசாரித்தோம்.

ஆனால் அவர் அந்த பெண் யாரென்று தனக்கு தெரியவில்லை என்று சதுர்வேதி மறுத்தார். மேலும்,அந்த பெண் தன்னை ஒருபோதும் சந்தித்ததில்லை என்றும் கூறினார்.

இதையடுத்து சதுர்வேதிக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்பதால், ஒரு பத்திரத்தை தாக்கல் செய்த பின்னர் அந்த பெண்ணை விடுவித்தோம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மன்மதன் படத்தில் வரும் காட்சிகளை போன்று உண்மையாக பீகாரில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Views: - 312

0

0