சிறுத்தையுடன் ஆயுதம் இல்லாமல் ஒற்றை ஆளாக போராடிய சிங்கப்பெண்!

13 January 2021, 12:05 pm
Quick Share

தாக்க வந்த சிறுத்தையுடன் ஆயுதம் இல்லாமல் வெறுங்கைகளால் போராடி பெண் ஒருவர் உயிர்பிழைத்த சம்பவம் மேற்கு வங்கத்தில் நடந்தது.

காடுகளை அழித்து மனிதன் ஆக்கிரமிப்பு செய்ய, தங்கள் வாழ்விடத்தை இழந்த தவிக்கும் மிருகங்கள், ஊருக்குள் புகுந்து தாக்கும் சம்பவங்கள் இந்தியாவில் அடிக்கடி நிகழும் ஒன்று. யானை, சிங்கம்ல புலி, சிறுத்தை உள்ளிட்ட மிருகங்களை கட்டுப்படுத்த மனிதன் முயற்சிக்கையில், அங்கு மனித – மிருக மோதல் உருவாகி விடுகிறது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில், தேயிலை தோட்டத்தில் ஒரு பெண் தனியாளாக நிராயுதபாணியாக போராடி, சிறுத்தையிடமிருந்து தப்பி உயிர் பிழைத்துள்ளார். அங்குள்ள பட்காவா தேயிலை தோட்டத்தில், லீல்கா ஓரான் என்ற பெண், வேலை செய்து வந்தார். அப்போது, அங்கு வந்த சிறுத்தை ஒன்று, ஓரான் எதிர்பார்காத நேரத்தில் அவரை தாக்க துவங்கியிருக்கிறது. உயிர் காக்க போராடிய அந்த சிங்கப்பெண், ஆயுதம் இல்லாமல், சுமார் 10 நிமிடங்கள் சிறுத்தையுடன் சண்டை செய்துள்ளார். பின் சிறுத்தை தப்பி ஓடிவிட்டது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஓரான், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் சிகிச்சை பெறும் லிலாபரி கிராமீன் மருத்துவனையின் டாக்டர் சந்தீபன் சர்க்கார் கூறுகையில், ‛அந்த பெண் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் உயிருக்கு ஆபத்து இல்லை. அவரது வீரத்துக்கு நாங்கள் தலை வணங்குகிறோம்’’ என்றார்.

மேற்குவங்கத்தில் மனித – மிருக மோதல் நடப்பது முதல் முறை அல்ல என தெரிவித்துள்ள வனத்துறை அதிகாரிகள், அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக கூறினர். முரத்தால் புலியை அடித்து விரட்டி அடித்த காலம் போய், வெறுங்கைகளால் சிறுத்தையுடன் போராடிய இந்த சிங்கப்பெண்ணுக்கு தைரியம் கொஞ்சம் அதிகம் தான்..!

Leave a Reply