மருமகளை இப்படி எல்லாமா கொடுமைப்படுத்துவாங்க? இந்த மாமியார் என்ன செய்திருக்கிறார் பாருங்க!

9 April 2021, 8:18 am
Quick Share

ஒடிசாவில் உள்ள 24 வயது மருமகளை, அவரது மாமியார் நிர்வாணமாக தாக்கி கொடுமைப்படுத்தி இருக்கிறார். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மாமியாரை தனது தாயாராகவே பார்க்கும் அந்த காலம் கரையேறிவிட்டது. திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்கு போகும் பெண்களை மாமியார்கள் தங்கள் மகள் போல பார்த்து கொண்டதும், மருமகள் மாமியாரை மதித்து நடந்து, தனது தாயாக பார்த்து கொண்டதும் இப்போது நாடகங்களில் கூட காட்டப்படுவதில்லை. இப்போதெல்லாம், மாமியார் மருமகள் சண்டை வீட்டுக்கு வீடு நடந்து வருகிறது. அப்படி நடக்காவிட்டால் தான் ஆச்சரியம்.

ஒடிசாவில், நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ காண்போரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள கோரக் கிராமத்தில், புதிதாக திருமணம் ஆன 24 வயது இளம்பெண் ஒருவர், கணவர் வீட்டார் கேட்ட வரதட்சனையை கொடுக்கவில்லையாம். இதனால், மாமியாருக்கு மருமகள் மீது எரிச்சல் உண்டாகி இருக்கிறது. இந்நிலையில், கேட்ட வரதட்சணை கொடுக்காத, தனது மருமகளை, தொடர்ந்து துன்புறுத்தி வந்த மாமியார், வீட்டிற்குள் வைத்து மருமகளை நிர்வாணமாக்கியும் சரமாரியாக தாக்கியுள்ளார்.

மருமகளின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் வந்து மருமகளை மீட்டிருக்கின்றனர். மருமகளை மாமியார் தாக்கும் கொடூர காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, காண்போரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. விஷயம் அறிந்த மருமகளின் குடும்பத்தினர், மாமியார் மீது போலீசில் புகார் அளித்திருக்கின்றனர். மாமியார் தலைமறைவாகிவிட்ட நிலையில், அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். பாவம் தான் அந்த மருமகள்!

Views: - 73

0

0