சாப்பிடுவதற்கு முன் இறைவனை துதிக்க நாய்களுக்கு கற்றுத்தரும் பெண் – வைரலாகும் வீடியோ

3 May 2021, 11:15 am
Quick Share

சாப்பிடுவதற்கு முன் மந்திரங்கள் ஓதி, இறைவனை துதிக்க நாய்களுக்கு பெண் ஒருவர் பயிற்சி அளிக்கும் வீடியோ, இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பெண் ஒருவர், தான் வளர்க்கும் நாய்களை, சாப்பிடுவதற்கு முன்பு, மந்திரங்கள் ஓதி, இறைவனை துதிக்க பயிற்சி அளிப்பதான வீடியோ, சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ, நெட்டிசன்களிடையே பெரும் விவாதப்பொருளாக மாறி வருகிறது. வைஷாலி மாத்தூர் என்ற டுவிட்டராட்டி, தனது நண்பர், நாய்களுக்கு உணவு அளிக்கும் முன்பு, மந்திரங்கள் ஓதி இறைவனை துதிக்கிறார்.

இந்த பயிற்சியை, நாய்களுக்கும் சொல்லித் தருகிறார். நாய்களும் அமைதியாக இருந்து அந்த பெண் மந்திரங்களை முடிக்கும் வரை, நிதானம் காத்து பின் சாப்பிட துவங்குகின்றன.
பெண் தான் வளர்க்கும் நாய்களுக்கு, பவுலில் உணவை வைக்கிறார். நாய்கள் அந்த பவுலை விட்டு சிறிது தொலைவில் அமர்ந்து இருக்கின்றன. இரண்டு நாய்களுக்கும் நடுவில், அமர்ந்து உள்ள பெண், மந்திரங்களை ஜபிக்க ஆரம்பிக்கிறார். அந்த நாய்கள் அமைதியாக அமர்ந்து இருக்கின்றன. மந்திரம் ஓதி, இறைவனை துதித்த பிறகு, அந்த பெண், நாய்களுக்கு சைகை காட்டுகிறார். அதன்பிறகே, நாய்கள் உணவை சாப்பிட துவங்குகின்றன.

இந்த வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டு உள்ள வைஷாலி மாத்தூர், இவைகள் நல்ல பையன்கள் என்று தலைப்பு இட்டுள்ளார்.

இந்த வீடியோ, இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை பார்வை இடப்பட்டுள்ள நிலையில், 1,400க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்று உள்ளன. நெட்டிசன்கள், மனதை கவர்ந்த இந்த வீடியோவிற்கு பல்வேறுவிதமான கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர்.

Views: - 94

0

0

Leave a Reply