கருக்கலைப்பு செய்ய பெண்களுக்கு உரிமை உண்டு… அதே சமயம்.. : உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
29 September 2022, 11:40 am
Abortion Rights - Updatenews360
Quick Share

சட்டபூர்வமான மற்றும் பாதுகாப்பான கருக்கலைப்பு செய்து கொள்ள செய்ய பெண்களுக்கு உரிமை உண்டு என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

யாருக்கு எந்த சூழலில் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்ற விதிமுறைகளை ஒழுங்குபடுத்துவது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த்து.

இந்த நிலையில் இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பளித்துள்ளது. அதன்படி சட்டபூர்வமான மற்றும் பாதுகாப்பான கருக்கலைப்பு செய்து கொள்ள செய்ய பெண்களுக்கு உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கருக்கலைப்பு செய்து கொள்ள அனைத்து பெண்களும் தகுதி உடையவர்கள் எனவும், கருக்கலைப்புக்கான உரிமை என்பது திருமணத்தின் மூலம் மட்டுமே கிடைக்கும் என்ற நிலையை மாற்றுவது அவசியம்.

பாதுகாப்பற்ற முறையில் கருக்கலைப்பு செய்துகொள்வது மட்டுமே தடுக்கப்பட வேண்டியது என நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.

Views: - 198

0

0