லீவ் எடுக்காமல் ‘வொர்க் பிரம் சைக்கிள்’.. மும்பை டூ குமரி டூர் வந்த இளைஞர்கள்

22 January 2021, 8:54 am
Quick Share

சைக்கிளில் பயணித்தபடியே மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிளில் சுற்றுலா வந்த இளைஞர்கள், தங்களது ஆபிஸில் லீவும் போடாமல், ‘வொர்க் பிரம் சைக்கிள்’ மூலம் சாதித்திருக்கிறார்கள்.. அது எப்படி சாத்தியம் என்கிறீர்களா.. தொடர்ந்து படியுங்கள்..

கொரோனா வைரஸ் பரவலால், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வேலைக்கு செல்லும் பலரும் வீட்டில் இருந்தபடி, தங்கள் பணியை தொடர்ந்தார்கள். இதனால் கம்பெனியின் செலவு பெருமளவு குறைந்ததால், தொடர்ந்து பலரும் வொர்க் பிரம் ஹோமில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், ‘வொர்க் பிரம் சைக்கிள்’ செய்து அசத்தியிருக்கிறார்கள் இந்த மஹாராஷ்டிர இளைஞர்கள்.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் பணியாற்றும் இளைஞர்கள் பக்கன் ஜார்ஜ், ஆல்வின் ஜோசப் மற்றும் ரதீஸ் பலராவ். இவர்கள் மூவரும் தங்கள் சைக்கிள் மூலம் மும்பையில் இருந்து கன்னியாகுமரி வரை மொத்தம் 1687 கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிளில் கடந்து முடித்துள்ளனர். இதில் ஸ்பெஷல் என்னவென்றால், இவர்கள் மூவரும் தங்களது அலுவலகத்தில் லீவ் எதுவும் எடுக்காமல், சைக்கிளில் பயணித்த நேரம் போக, தாபா, லாட்ஜ் ஆகியவற்றில் தங்கி தங்களது அலுவலக வேலையையும் பார்த்துள்ளனர்.

தினமும் காலை 4 மணிக்கு சைக்கிள் பயணத்தை ஆரம்பிக்கும் இவர்கள், காலை 11 மணி வரை சைக்கிளில் பயணிக்கிறார்கள். பின் வழியில் இருக்கும் தாபா, லாட்ஜ்ஜில் தங்கி பணிகளை செய்துள்ளனர். இவர்களின் இந்த பயணத்துக்கு 25 ஆயிரம் ரூபாய் செலவு ஆயிருக்கிறது. இதில் லாட்ஜ் வாடகை தான் அதிகமாம். அலுவலக தரப்பிலிருந்தும் தங்களுக்கு ஆதரவு கிடைத்ததால் இந்த பயணத்தை சாதிக்க முடிந்தது என தெரிவிக்கும் அவர்கள், இந்த பயணம் தங்களது வாழ்வில் என்றும் மறக்க முடியாது என தெரிவித்துள்ளனர். டூருக்கு ரூர் ஆச்சு.. ஆபிஸ் வேலையும் காப்பாத்தியாச்சு.. கரெக்ட் தானே..

Views: - 0

0

0