அதிக மக்கள் தொகையில் சீனாவை முந்திய இந்தியா.. எத்தனை கோடி மக்கள் தெரியுமா..? ஐ.நா. வெளியிட்ட பரபரப்பு தகவல்!!

Author: Babu Lakshmanan
19 April 2023, 2:29 pm
Quick Share

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்க இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

நடப்பாண்டு வரையிலான உலக மக்கள் தொகை குறித்த அறிக்கையை ஐ.நா.வின் மக்கள் தொகை நிதியம் வெளியிட்டுள்ளது. அதில் மக்கள் தொகையின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அதன்படி, அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 142.86 கோடி மக்கள் தொகையை எட்டும் என்றும், சீனா 142.57 கோடியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது சீனாவை விட இந்தியாவில் 29 லட்சம் கூடுதலாகும். மூன்றாவது இடத்தில் அமெரிக்க மக்கள் தொகை 34 கோடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“2011ம் ஆண்டு இந்தியாவில் மக்கள் தொகை எடுக்கப்பட்ட நிலையில், 2021ல் மீண்டும் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனா காரணமாக எடுக்கப்படவில்லை.
இந்த மாற்றம் இந்த மாதத்தில் நிகழும் என்றாலும், அது எப்போது நிகழும் என தெரியாது,” என்று மக்கள் தொகை பெருக்கம் சார்ந்த ஆய்வில் நிபுணத்துவம் பெற்ற ஐநா அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த ஆண்டின் இறுதியில் உலக மக்கள் தொகை 804.50 கோடியாக இருக்கும் என்று கணித்துள்ள நிபுணர்கள், அதில், மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தொகையை இந்தியாவும், சீனாவுமே கொண்டிருக்கும் என்றும், இவ்விரு நாடுகளிலும் மக்கள் தொகை பெருக்க வேகம் தற்போது குறைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

Views: - 701

0

0