தென்னிந்தியாவின் முதல் பாஜக CM… ஒருமுறை கூட 5 ஆண்டுகள் ஆட்சியில்லை : ராசியில்லாத எடியூரப்பா..!!!

Author: Babu
26 July 2021, 1:42 pm
yediyurappa - - updatenews360
Quick Share

தென்னிந்தியாவின் முதல் பாஜக முதலமைச்சர் என்ற பெருமையை எடியூரப்பா பெற்றிருந்தாலும் அவர் ராசியில்லாத முதலமைச்சராக அனைவராலும் அறியப்படுகிறார்.

கடந்த 2019ம் ஆண்டு கர்நாடகா சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் அரசு தோல்வியை தழுவியது. இதையடுத்து 105 உறுப்பினர்களைக் கொண்டு தனிப்பெரும்பான்மை கட்சியாக இருந்த பாஜக ஆட்சியமைத்தது. 2019 ஆம் ஆண்டு ஜுலை 26 தேதி எடியூரப்பா கர்நாடக முதலமைச்சராகப் பதவியேற்றார்.

அவர் பதவியேற்று இன்றுடன் இரு ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆனால், தனது மகன் விஜயேந்திராவை துணை முதலமைச்சராக்க முயல்வதாகவும், மாநிலத்தில் அவரது குடும்பம் அரசு விவகாரங்களில் தலையிடுவது அதிகரித்துள்ளதாக முதலமைச்சர் எடியூரப்பா மீது சக கட்சி நிர்வாகிகளும், அமைச்சர்களும் மேலிடத்திற்கு அடுத்தடுத்து புகார் அளித்தனர். இதனால், அவர் மீது மத்திய பாஜகவுக்கு அதிருப்தி ஏற்பட்டது.

Edyurappa_UpdateNews360

மேலும், டெல்லிக்கு சென்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த நிலையில், கர்நாடகா முதலமைச்சர் பதவியில் இருந்து விலகப்போவதாக இன்று காலையில் அறிவித்த பி.எஸ். எடியூரப்பா, தமது ராஜிநாமா கடிதத்தையும் மாநில ஆளுநரிடம் அளித்துள்ளார்.

என்னதான் மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தாலும், தென்னிந்தியாவில் அந்தக் கட்சிக்கான மவுசு ரொம்பவும் குறைவே. அப்படியிருக்கையில், தென்னிந்தியாவின் முதல் பாஜக முதலமைச்சராக பொறுப்பேற்றவர் எடியூரப்பா. ஆனால், ஒரு முறை கூட 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்யாத முதலமைச்சர் என்னும் மோசமான சாதனையையும் அவர் பெற்றிருக்கிறார்.

2007ஆம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி ஜனதா தளம் (மதசார்பற்ற) கட்சியுடனான கூட்டணி அரசு கவிழும் முன்பு, 7 நாட்கள் முதலமைச்சராகப் பணியாற்றினார். இதேபோல, 2011ம் ஆண்டு நில ஊழல் வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், தனது முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

Yediyurappa 01 updatenews360

கடந்த 2016ம் ஆண்டு கர்நாடக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டில் பாஜக போட்டியிட்டது. அதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 104 இடங்களைப் பெற்ற பாஜகவை ஆட்சி அழைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். அதனையேற்று 3வது முறையாக முதலமைச்சராக எடியூரப்பா பதவி ஏற்றார். ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் ஆட்சி ஏற்ற 3வது நாளிலே பதவியை இழந்தார்.

மேலிடத்தில் இருந்து எந்த அழுத்தமும் வராத நிலையில், மகிழ்ச்சியுடன் தற்போது பதவியை ராஜினாமா செய்வதாக எடியூரப்பா அறிவித்திருந்தாலும், இதன் பின்னணியில் உட்கட்சி பூசல் இருப்பது அம்பலமாகியுள்ளது.

Views: - 202

0

0