எடியூரப்பாவை தொடர்ந்து மகளுக்கும் பரவிய கொரோனா…! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

3 August 2020, 11:08 am
Corona Test - Upatenews360
Quick Share

பெங்களூரு: கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகளுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் முதலமைச்சராக இருப்பவர் எடியூரப்பா. பாஜகவை சேர்ந்தவர். 77 வயதான பாஜக அவர் ஆளும் மாநிலங்களில் அதிக வயதுடைய முதலமைச்சர்.

அவர் ஆளும் அந்த மாநிலத்தில் கொரோனாவுக்கு பஞ்சமில்லை. படு வேகமாக பரவி வருகிறது. ஆகையால் வைரஸ் தொற்று தடுப்பு குறித்து அவ்வப்போது அமைச்சர்கள், அதிகாரிகளுடன் அடிக்கடி ஆலோசனை செய்து வந்தார்.

அவரது இல்லத்தில் அலுவலக ஊழியர்கள் சிலருக்கு கொரோனா ஏற்பட்டது.ஆகையால் 5 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். ஆனாலும் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அமைச்சர் சுதாகர் தமது டுவிட்டர் பக்கத்தில் இதை அறிவித்து, எடியூரப்பா சிகிச்சை பெற்று வருவதாகவும், விரைவில் வீடு திரும்ப வாழ்த்துவதாகவும் கூறி இருந்தார்.

இந் நிலையில் எடியூரப்பா மகளுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அவர் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். 

Views: - 1

0

0